சென்னை:   சிவகங்கை மாவட்டத்தில் குவாரி ஒன்றில் கல் சரிந்து 5 தொழிலாளிகள் உயிரிழந்த நிலையில்,  தமிழ்நாடு முழுவதும் குவாரிகளை ஆய்வு செய்ய கனிமவளத்துறை உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகேயுள்ள மல்லாக்கோட்டையில் செயல்பட்டு வரும் தனியார் கல்குவாரியில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு கல் வெட்டும் பணி நடைபெறுவதுடன், பல்வேறு இடங்களில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டுவரும் கற்களை சேமித்து வைத்து அதன்மூலம் எம்சாண்ட் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த குவாரியில், நேற்று 100 அடி ஆழத்தில் 18 தொழிலாளர்கள் பொக்லைன் எந்திரம் உதவியுடன் பாறைகளை வெட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் இருந்த பெரிய ராட்சத பாறைகள் திடீரென பயங்கர சத்தத்துடன் மேலே இருந்து உருளத்தொடங்கியது. இதை கண்ட தொழிலாளர்கள் அங்கிருந்து அலறியடித்துக்கொண்டு ஒடினர். இருந்தாலும்,  6 தொழிலாளர்கள்  பாறைகளில் சிக்கி கொண்டனர். இதையடுத்து அவர்களை மீட்கும் பணியில் கடும் சிரமம் ஏற்பட்டது. ஒழிவழியாக சுமார் 12மணித்துக்கு பிறகு இறந்த தொழிலாளர்ளின் உடல்கள் மீட்கப்பட்டன. இது பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து,   தமிழ்நாடு முழுவதும் குவாரிகளை ஆய்வு செய்ய கனிமவளத்துறை உத்தரவிட்டுள்ளது. விபத்தை அடுத்து மாநிலம் முழுவதும் உள்ள கல்குவாரிகளை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது. பாதுகாப்பு நடைமுறைகளை குவாரிகள் முறையாக பின்பற்றுகின்றனவா? என ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது.

கிரானைட் தொழிலுக்கு புத்துயிர்! கனிமவளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது அமைச்சர் துரைமுருகன் தகவல்…