சென்னை: தமிழ்நாடு காவல்துறை உள்பட பல்வேறு துறைகளில் கருணை அடிப்படையில் 115 பேருக்கு பணி நியமன ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் .
பணிக்காலத்தில் உயிரிழந்த காவலர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, பணிக்காலத்தில் உயிரிழந்த காவலர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு 115 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இதேபோல், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வான 36 பேருக்கும் பணி ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
மீன்வளம், மீனவர் நலத்துறை, மீன்வளர்ச்சி கழகத்தில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணியிடங்களுக்கு தேர்வானோருக்கு பணி ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.