சென்னை:  சென்னை பல்லாவரம் ரயில் நிலையத்தில் ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பயணிகள் அச்சமடைந்து கூச்சலிட்டனர்.

கள் கூட்டம் அலைமோதும் ரயில் நிலையங்களில் பல்லாவரம் ரயில் நிலையமும் ஒன்று. எப்போதும் பரபரப்பாக காணப்படும்  இந்த ரயில் நிலையத்தை தினசரி பல ஆயிரம் பேர் பயன்படுத்தி வருகின்றனர்.  அந்த சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் முதல் வேலைக்கு செல்லும் பணியாளர்கள் மற்றும் மக்கள் என ஏராளமானோர் இந்த ரயில் நிலையத்திற்கு  வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில்,  இன்று காலை பல்லாவரம் ரயில் நிலையத்தில் ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையில்,  கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரயிலின் 6-வது பெட்டியில் புகை வந்ததால் பல்லாவரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.  அந்த நேரத்தில்,  தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி மற்றொரு ரயில் அந்த தண்டவாளத்தில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதை கண்ட ரயில்வே அதிகாரிகள் உடனே அந்த ரயிலை முன்கூட்டியே நிறுத்த அறிவுறுத்தினர். அதன்படி ரயில்  நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக பெரும் விபத்து தவிர்க்கர்பட்டது.

2 ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் இருப்பதைக் கண்டு பயணிகள் பதற்றம் அடைந்தனர்.