சண்டிகர்: அரியான மாநிலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரலணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர். கடந்த  24 மணி நேரத்தில் 3வது முறையாக மேலும் 5 பேர் பலியாகி இருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது.  கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 3.52 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, 2812 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த நிலையில் அரியானா மாநிலத்தில்  கடந்த 24 மணி நேரத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 3 மருத்துவமனைகளில் அடுத்தடுத்து உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன,

குர்கவான் பகுதியில் உள்ள  தனியார் மருத்துவமனை ஒன்றி நேற்று (ஞாயிறு) காலை ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 4 நோயாளிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து வேறு மருத்துவமனையில் 2 பேர் ஆக்சிஜன் இல்லாமல் உயரிழந்ததாக அவர்களது உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும்,  ஹரியானா ஹிசார் மாவட்டத்தில் 5 நோயாளிகள் ஆக்சிஜன் இல்லாமல் மரணமடைய நேரிட்டதாக கூறப்படுகிறது.

ஆனால்,  குர்கவான் மருத்துவமனையில்  4 நோயாளிகள் உயிரிழந்ததற்கு ஆக்சிஜன் காரணமல்ல, அவர்களுக்கு தீவிர கொரோனா தொற்று இருந்தது என்று கூறியுள்ளனர்.

இதையடதது, அரியானா மாநில தலைமைச் செயலர் விஜய் வர்த்தன் அனைத்து உதவி ஆணையர்களுக்கும் அவசர சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில்,  அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் சப்ளை போதிய அளவு இருக்குமாறு உறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

அடுத்தடுத்து கொரோனா நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் அம்மாநில மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.