டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,119  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என்றும், கடந்த 539 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,09,940 ஆக குறைந்து இருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

இதற்கிடையில், மத்திய சுகாதார அமைச்சகம் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது, அதில், வாராந்திர சோதனை விகிதங்கள் குறைந்து வருவது மற்றும் சில மாவட்டங்களில் நேர்மறை விகிதங்கள் அதிகரிப்பது குறித்து கவலை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், புதிதாக மேலும் 9119 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,45,44,882 ஆக அதிகரித்து உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 10264 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,39,67,962 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.33% ஆக உயர்ந்துள்ளது

நேற்று மேலும் 396 பேர் கொரேனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,66,980 ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.35% ஆக குறைந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் 1,09,940 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 539 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை ஆக குறைந்து இருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில்90,27,638   பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 1,19,38,44,741 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.