2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-வுடன் கூட்டணி அமைப்பது என்று பாமக முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் தைலாபுரத்தில் இன்று கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

அதிமுக-வுடன் கூட்டணி குறித்து பேசுவதற்காக கூட்டம் நடைபெறுவதாக தகவல் வெளியான நிலையில் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பாமக மாநில பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் பாஜக உடன் கூட்டணி அமைக்கப்போவதாக அறிவித்தார்.

பாமக-வுக்கு 10 மக்களவை தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை சீட்டும் தர பாஜக சம்மதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து நாளை சேலம் செல்லவுள்ள அன்புமணி ராமதாஸ் பிரதமர் மோடியை சந்தித்து கூட்டணி குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்க இருப்பதாகத் தெரிகிறது.

பின்னர், மோடி தலைமையில் சேலத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் அன்புமணி கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.