சென்னை

மது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தது குறித்து தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார். 

தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா, புதுச்சேரி மாநில ஆளுநராகப் பதவி வகித்து வந்தார்.. நேற்று  இவர் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து தனது ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி, தெலுங்கானா ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்தபின் தமிழிசை சவுந்தரராஜன் தமிழகம் வந்தடைந்தார்.

தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்,

”நான் தீவிரமான மக்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்பதற்காகவே ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன். நான் என்றும் தெலுங்கானா, புதுச்சேரி மக்களுக்கு நன்றியுடையவளாக இருப்பேன்.   

மக்களுக்கு நேரடியாக பணியாற்றுவதே என் விருப்பமாகும். எனது விருப்பத்தின் பெயரில் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன் என்பதே உண்மை.  தற்போது நான் நேரடியாக நேர்மையான அரசியலுக்கு வந்துள்ளேன்.” 

என்று கூறினார்.