பெங்களூரில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் இரண்டாவது சந்திப்பு இன்று நிறைவடைந்ததை அடுத்து இந்த கூட்டணிக்கு இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி (Indian National Developmental Inclusice Alliance – INDIA) என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி “2024 பொதுத்தேர்தல் INDIA வுக்கும் NDA வுக்கும் இடையிலான மோதலாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

பாஜக-வை தோற்கடிப்பதை நோக்கமாகக் கொண்டு எதிர்க்கட்சிகள் கைகோர்த்திருக்கும் நிலையில் இதன் அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக சட்டமன்ற தேர்தல் தோல்விக்குப் பிறகு தென் மாநிலங்களைக் கைப்பற்றும் பாஜக-வின் முயற்சி பலிக்காமல் போனதை அடுத்து வடமாநிலங்களை தக்கவைத்துக் கொள்ள 38 கட்சிகளுடன் டெல்லியில் இன்று ஆலோசனையில் இறங்கியுள்ள அதேவேளையில் தென் மாநிலங்களைச் சேர்ந்த கூட்டணி கட்சிகளுக்கு அதிக சலுகைகளை வழங்கவும் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என்று பெயரிடப்பட்டுள்ளது…