னகாப்பள்ளி

ந்திர மாநிலத்தில் ஒரு பெண்ணின் எடைக்கு நிகராக 51 கிலோ தக்காளியை அம்மனுக்குக் காணிக்கையாக அவரது பெற்றோர் அளித்துள்ளனர்.

தங்கம் போல நாட்டில் தக்காளி விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் தக்காளியை வைத்து கடந்த சில வாரங்களாக ஒரு சில வினோத சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஒரே இரவில் சில விவசாயிகள் தக்காளியை விற்று கோடீசுவரர்களாக மாறி வருகின்றனர். திருடர்கள் விவசாயிகளிடம் இருந்து தக்காளியைத் திருடிச் செல்வதால் தக்காளியைப் பாதுகாக்க சில இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது.

பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காய்கறி வியாபாரி ஒருவர் தனது கடையில் தக்காளியைப் பாதுகாக்க பவுன்சர்களை அமர்த்திய நிலையில் ஆந்திராவில் ஒரு சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.  இந்நிலையில் ஆந்திர மாநிலம் அனகாப்பள்ளி மாவட்டத்தில் உள்ள நுகலம்மா கோயிலில் ஒரு தம்பதியினர் தக்காளியுடன் ‘துலாபாரம்’ வழங்கினர்.

ஆண்டிராவில் ஒரு கிலோ தக்காளி, 160 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதால், ‘துலாபாரம்’ சிறப்பு அம்சமாக மாறியுள்ளது.  ஆந்திராவில் அனகாபள்ளியைச் சேர்ந்த அப்பா ராவ் மற்றும் மோகினி ஆகியோர் தங்கள் மகள் பவிஷ்யாவின் எடைக்கு எடை நிகரான தக்காளியை நுகலம்மா கோயிலில் அம்மனுக்குத் துலாபாரத்தில் அர்ப்பணம் செய்து 51 கிலோ தக்காளி அளித்துள்ளனர். இந்த தக்காளி கோயிலின் அன்னதானக்கு பயன்படுத்தப்படும் எனக் கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.