சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் மெடரோ ரயில் சேவை கொரோனா லாக்டவுனுக்கு பிறகு மக்களிடையே நல்ல  வரவேற்பை பெற்றுள்ளது. நாள் ஒன்றுக்கு சராரியாக 28ஆயிரம் பேர் முதல் அதிகபட்சமாக 38ஆயிரம் பேர் வரை பயணம் செய்துள்ளதாகவும், கடந்த 3 மாதங்களில் மட்டும் 19.21 லட்சம் போ் பயணம் செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக நிறுத்தப்பட்ட பல்வேறு சேவைகள், மத்திய மாநிலஅரசுகள் வழங்கிய தளர்வுகள் காரணமாக மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அதன்படி சென்னை மெட்ரோ ரயில்சேவையும் கடந்த செப்டம்பர் 7ந்தேதி மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தொடங்கியது. முதல்கட்டமாக, விமானநிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை வரையும், இரண்டாம் கட்டமாக, பரங்கிமலையில் இருந்து கோயம்பேடு வழியாக சென்னை சென்ட்ரல் வரையும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டன.

மெட்ரோ ரயில்சேவை தொடங்கியபோது, குறைவான மக்கள் தான்  பயணம் செய்தனா். பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்கும் விதமாக,பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்பிறகு, பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது. பின்னர் தொடர்ந்து பயணிகளின் வருகைக்கு ஏற்ப சேவைகள் அதிகரிக்கப்பட்டன.

பொதுமுடக்கம் தளா்வுக்கு பின்பு மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டு, கடந்த மூன்று மாதத்தில் (செப்டம்பர் 7ந்தேதி முதல் நவம்பர் 30ந்தேதி வரை) 19 லட்சத்து 21 ஆயிரத்து  962 போ் பயணம் செய்துள்ளனா். குறிப்பாக, செப்டம்பா், அக்டோபா் ஆகிய மாதங்களை விட நவம்பரில் அதிக மக்கள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனா்.. கடந்த செப்டம்பா் 7-ஆம் தேதி முதல் நவம்பா் 30-ஆம்தேதி வரை மூன்று மாதத்தில் 19 லட்சத்து 21 ஆயிரத்து  962 போ் பயணம் செய்துள்ளனா்.

ஒரு நாளைக்கு சராசரியாக பயணிகளின் எண்ணிக்கை சுமார் 28,600 ஐத் தொட்டுள்ளது, நவம்பர் 23 அன்று அதிகப்பட்சமாக 38,000 பயணிகள் மெட்ரோவைப் பயன்படுத்தினர். செப்டம்பா் மாதத்தில் 24 நாள்களில் 3 லட்சத்து 60 ஆயிரத்து 193 பேரும்,  அக்டோபரில் 7 லட்சத்து 3 ஆயிரத்து 223 பேரும், நவம்பரில் 8 லட்சத்து 58 ஆயிரத்து 546 போ் பயணம் செய்துள்ளனா்.  ஒரு நாளைக்கு பயணிக்கும் சராசரி பயணிகளின் எண்ணிக்கை சுமார் 28,600 ஐத் தொட்டுள்ளது. இது 37சதவிகித அதிகரிப்பு என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது

இது குறித்து  கூறிய சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள்,  கடந்த சில வாரங்களில், இடைப்பட்ட புயல், மழை காரணமாக, அதிகமான பயணிகள் மீண்டும் மெட்ரோ ரெயில் மூலம் பயணிக்கத் தொடங்கினர். “ஆரம்பத்தில், எங்கள் வழக்கமான பயணிகள் பலர் பொதுப் போக்குவரத்தில் பயணிப்பதைத் தவிர்ப்பதற்காக இரு சக்கர வாகனங்களில் தங்கள் பணியிடங்களுக்குச் சென்றனர். ஆனால் இப்போது, படிப்படியாக, ரயில்கள் எவ்வாறு சுத்தம் செய்யப்படுகின்றன மற்றும் உடல் ரீதியான தூரம் பராமரிக்கப்படுகின்றன என்பதைப் பார்த்த பிறகு, பலர் வழக்கம் போல் மீண்டும் பயணத்தைத் தொடங்கினர். மழை பெய்யத் தொடங்கியதும், பைக்குகளில் பயணம் செய்வதை கைவிட்டு, ரயில்களை பயணிகள் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர்.

நவம்பா் மாதத்தில், கியூ ஆா் குறியீடு பயணச் சீட்டு முறையைப் பயன்படுத்தி 21,579 போ்   பயணம் செய்துள்ளனா். மேலும், பயண அட்டை பயணச்சீட்டு முறையை  பயன்படுத்தி 4 லட்சத்து 72 ஆயிரத்து 027 போ் பயணம் செய்துள்ளனா்.மெட்ரோ ரயிலில் பயணிப்பவா்களுக்கு கியூ ஆா் குறியீடு பயணச்சீட்டில் ஒருவழிப் பயண அட்டை, இருவழிப் பயண அட்டை, பலவழிப் பயண அட்டை ஆகியவற்றில் கடந்த செப்டம்பா் 11 முதல் 20 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படுகிறது.

ஏற்கெனவே, செயல்பாட்டில் உள்ளபடி, மெட்ரோ ரயில் பயண அட்டைகளைப் பயன்படுத்தி பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு 10 சதவீதம் கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

கொரோனா நோய்த்தொற்றைத் தடுப்பதற்காகவும், அனைத்துப் பயணிகளின் பாதுகாப்பான பயணத்துக்காகவும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயணச்சீட்டு வழங்கும் முறை மற்றும் அனைத்து விதிகளையும் பணிகள் பின்பற்ற அறிவுறுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்து உள்ளனர்.