சென்னை: பாமகவின் வன்முறை போராட்டக்காரர்கள் மீதுநடவடிக்கை எடுக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ள நிலையில், தமிழகஅரசு. பாமக இளைஞர்அணித்தலைவர் அன்புமணி, ஜி.கே.மணி உள்பட 3000 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.
சென்னையில்,  நேற்று இடஒதுக்கீடு போராட்டம் நடத்திய அன்புமணி ராமதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட 856 பாமகவினர் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில், வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு வழங்கக் கோரி பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் சென்னையில் ஆர்ப்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். இந்த  ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாமகவினர் சென்னைக்கு வாகனங்களில் வந்தனர். அவர்கள் வண்டலூர் அருகே பெருங்களத்தூர், தாம்பரம் ஆகிய பகுதிகளில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அதனால், பாமகவினர் தாம்பரத்தில் உள்ள ஜி.எஸ்.டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அதனால், ஜி.எஸ்.டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், பெருங்களத்தூரில் அனந்தபூர் எக்ஸ்பிரஸ் ரயில் மீது கற்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுமட்டுமின்றி சென்னையிலும் ரயில்கள் மீது கற்கள் வீசப்பட்டதால் ரயில், பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

போராட்டத்தை ஒடுக்க தமிழகஅரசு நடவடிக்கை எடுக்காமல், தட்டிக்கழித்து. இது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்திலும் முறையீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில், இடஒதுக்கீடு போராட்டம் நடத்தியதாக சுமார் 300 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ள தெரிவித்துள்ள காவல்துறை, சென்னையில்  அன்புமணி ராமதாஸ்,ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட 856 பாமகவினர் மீது மீது 3 பிரிவுகளில்  திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.