சென்னை

மிழகத்தில் இன்று 26,981 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 30,14,235 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று தமிழகத்தில் 1,50,635 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 5,99,80,920 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

 

இன்று 26,981 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் வெளிநாடுகளில் இருந்து 4 பேர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து 28 பேர் வந்துள்ளனர்.   இதுவரை 30,14,235 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 35 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 37,073 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 17,456 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 28,16,501 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 1,70,661 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 8,097 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 6,68,627 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று 12 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 8,760 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 7,298 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,97,355 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 62,512 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 3,082 உடன் இரண்டாம் இடத்திலும் செங்கல்பட்டு 2,194 உடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

மொத்த பாதிப்பில் இரண்டாவதாக உள்ள கோவை மாவட்டத்தில் 2,72,140 பேர் பாதிக்கப்பட்டு 2,537 பேர் உயிர் இழந்து 2,55,875 பேர் குணம் அடைந்து தற்போது 11,728 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த பாதிப்பில் மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,03,600 பேர் பாதிக்கப்பட்டு 2,568 பேர் உயிர் இழந்து 1,83,747 பேர் குணம் அடைந்து தற்போது 17,285 பேர் சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கையில் செங்கல்பட்டு இரண்டாம் இடத்தில் உள்ளது.