டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் உயரத்தொடங்கி உள்ளது. கடந்த 24மணி நேரத்தில் 2,183 புதிய வழக்குகளுடன் இந்தியாவின் தினசரி கோவிட் எண்ணிக்கையில் 90% அதிகரித்து உள்ளது. நேற்று  1,150 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது 2183 ஆக உயர்ந்துள்ளது. இது  89.8 சதவீதம் அதிகரிப்பு என கூறப்படுகிறது.

தலைநகர் டெல்லி உள்பட சில மாநிலங்களில் தொற்றுபரவல் மீண்டும் உயர்ந்து வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

த்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் புதிதாக மேலும் 2,183 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,44,280 ஆக உயர்ந்தது.

நேற்று 214 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளதால், இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,21,965 ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.21% ஆக குறைந்துள்ளது.

கடந்த 24மணி நேரத்தில் 1,985 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,25,10,773 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.76% ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் 11,191 பேர் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.  சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.03% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில்  இதுவரை 1,86,54,94,355 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 2,66,459 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.