சென்னை:

மிழகத்தில் 17 கூடுதல் எஸ்பிக்களை ஒரே நேரத்தில் பணியிட மாற்றம் செய்து டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டு உள்ளார்.

மேலும்,  கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் வேதரத்தினம், ஸ்ரீனிவாச பெருமாள், இளங்கோ, வனிதா, கோபி, சுஜாதா, முகிலன், பாஸ்கரன், அனிதா ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

முத்துக்கருப்பன், என். குமார், பாரதி, ரவி, லாவண்யா, ரமேஷ் பாபு, ராமமூர்த்தி, டி.குமார் ஆகியோரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே மக்களவைத் தேர்தல் பணிக்காக விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 19 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டம் செய்யப்பட்ட நிலையில், அவர்கள் மீண்டும் பழைய பணியிடத்திற்கே மாற்றப்பட்டனர்.

இந்த நிலையில், இன்று மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் 17 பேர் இடமாற்றம் செய்யட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.