சென்னை:

மிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் பிரச்சினையை உடனடியாக சரி செய்ய வலியுறுத்தி திமுக சார்பில் இன்றுமுதல் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

தண்ணீர் பிரச்சினை நிலவும் பகுதிகளில்,  பொதுமக்களை திரட்டி அமைதியான முறையில் குடிநீர் பிரச்சினைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தக்கோரி ஏற்கனவே திமுகதலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தா.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் நிலவும்  தண்ணீர் பிரச்சினையை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையிலும், அரசு உடனே தலையிட்டு  தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ந டவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

நேற்று சென்னையின் பல பகுதிகளில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், இன்று மாநிலம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம் செய்கிறது.