சென்னை: தமிழகத்தில் 10, 12ம் வகுப்பைப் சேர்ந்த 17 லட்சம் பேர் எழுதிய 1.87 கோடி விடைத்தாள் திருத்தும் பணி  இன்று தொடங்கியது.

தமிழ்நாடு முழுவதும் கடந்த மே மாதம் 10ம் வகுப்பு, 12ம் வகுப்புக்கான ஆண்டு இறுதித்தேர்வு நடைபெற்று முடிந்தது. இதையொட்டி,  10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி இன்று முதல் தொடக்கி நடைபெற்று வருகிறது. . 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத் தாள்கள், 83 மையங்களிலும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் 86 மையங்களிலும் திருத்தப்படுகிறது.

10, 12-ம் வகுப்பு மாணவர்கள் 17 லட்சம் பேர் எழுதிய 1.87 கோடி விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக, பிளஸ் 2 விடைத் தாள்கள்; பின், 10ம் வகுப்பு விடைத்தாள்கள்; அதைத் தொடர்ந்து, பிளஸ் 1 விடைத்தாள்களும் திருத்தப்பட உள்ளன.  வரும் 8-ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறுகின்றது.

8 லட்சம் பேர் எழுதிய 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வரும் 9-ம் தேதி தொடங்குகிறது. இதையடுத்தே விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் முகாம்கள் அமைக்கப்பட்டு நடந்து வருகிறது.

அதைத்தொடர்ந்து, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 23-ம் தேதி வெளியாகிறது. வரும் 23-ம் தேதி +2 முடிவுகளும், 17-ம் தேதி 10-ம் வகுப்பு முடிவுகளும் வெளியாக உள்ளது. விடைத்தாள் திருத்தும் பணிகளில் இருந்து, தலைமை ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.  விடைத் தாள்கள் திருத்தும் முகாம்களில் மதிப்பெண் சரிபார்ப்பு பணிகளுக்கு சம்பந்தப்பட்ட பாடத்தில் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் ஒரு சில முகாம்களில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை மதிப்பெண் சரிபார்ப்பு அலுவலராகவும், கணினி ஆப்பரேட்டர்கள் 2 அணியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட கல்வி அலுவலரிடமிருந்து, விடைத்தாள்களை முதன்மை தேர்வாளர் மட்டுமே பெற்றுச் செல்ல வேண்டும். தமிழ், ஆங்கிலம் பாட விடைத் தாள்கள் காலை 15, மதியம் 15 என ஒரு ஆசிரியர் நாள் ஒன்றுக்கு 30 விடைத்தாள்கள் மட்டுமே திருத்த வேண்டும். அதேபோல், இயற்பியல், வேதியியல், கணிதம் பாட விடைத்தாள்களை காலை 12, மதியம் 12 என ஒரு ஆசிரியர் நாள் ஒன்றுக்கு 24 விடைத்தாள்கள் மட்டுமே திருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருத்தி முடித்த விடைத்தாள்களை மதிப்பெண் சரிபார்ப்பு அலுவலரிடம் வழங்கப்பட வேண்டும். அங்கு மதிப்பெண்களின் கூடுதல் விபரம் சரிபார்க்கப்பட்டு, கணினி ஆப்பரேட்டர் மூலம் பதிவேற்றம் செய்யப்படும்.ஆசிரியர்கள் காலை 8:00 மணிக்கு விடைத்தாள் திருத்தும் மையங்களில் ஆஜராக வேண்டும். மதிப்பெண்களை சரியாக கணக்கிட வேண்டும். மற்றவர்களுடன் கலந்துரையாடுவதைத் தவிர்க்க வேண்டும்.

வினாவிற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விடைகள் இருந்தால் மதிப்பெண் கொடுக்கும் விதம், மாணவர்களின் நலன் பாதிக்காமல் மதிப்பெண் கணக்கிட வேண்டும். விடைத்தாளின் அனைத்து பக்கங்களையும் கவனித்து திருத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு அறிவுரைகள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு கல்வித்துறை வழங்கியுள்ளது.