டில்லி

புலம் பெயர் கட்டுமான தொழிலாளர்கள் எங்குச் சென்றாலும் நலத்திட்டஙக்ளைப் பெற வசதியாக இடம்பெயர் சான்றிதழ் அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நாடெங்கும் கட்டுமான பணிகளில் ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.   சமீபத்தில் கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் இவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.  இந்த வேளையில் பலர் பணி இழந்து சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவிக்க நேர்ந்தது.   புலம் பெயர் கட்டுமானத் தொழிலாளர்களுக்குப் பல நலத்திட்டங்களை அரசு அறிவித்தது.

இவர்களிடம் ஆதார் உள்ளிட்ட எந்த ஒரு அடையாளமும் இல்லாததால் இவர்களுக்கு இந்த நலத்திட்டங்களைப் பெற இயலாத நிலை ஏற்பட்டது.  பலரும் பசி மற்றும் பட்டினியால் வாடினர். போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் ஒரு சிலர்  நடந்தே தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல தொடங்கினர்.  இவர்களில் ஒரு சிலர் வழியில் மரணம் அடைந்தது மக்கள் மனதை மிகவும் உருக்கியது.  அதன் பிறகு இவர்கள் சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்காட்டன்ர்.

தற்போது இவர்கள் மீண்டும் சிறிது சிறிதாக பணிக்கு வரத தொடங்கி உள்ளனர்.  இவர்களுக்கு இடம் பெயர் சான்றிதழ் அளிக்க மத்திய அர்சு முடிவு செய்துள்ளது.   இதற்காகத் திட்டம் ஒன்றை அரசு அமைத்துள்ளது.  இதன்படி அனைத்து புலம் பெயர் தொழிலாளர்களையும் பதிவு செய்து ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து நலத் திட்டங்களை இவர்களுக்குக் கிடைக்க இந்த சான்றிதழ் உதவும் எனக் கூறப்படுகிறது.

இதற்காக வீட்டுக்கு வீடு கணக்கெடுப்பு, தானாகவே ஆன்லைன் மூலம் பதிவு செய்தல், உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.   இந்த கணக்கெடுப்பில்  ஆதார், வங்கிக் கணக்கு விவரங்க்ள், ஆகியவை மட்டும் அளிக்க வெண்டும்.   தற்போது மொத்தம் உள்ள 5 கோடி கட்டுமானத் தொழிலாளர்களில் 3.48 கோடி பேர் மட்டுமே பதியப்பட்ட தொழிலாளர்கள் ஆவார்கள்.  இதன் மூலம் மீதமுள்ளவர்களும் பதியப்பட்டு அவர்களுக்கு சான்றிதழ் வழங்க உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.