மதுரை:

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் விதிமீறல்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என்று  டஜன் கணக்கான  சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிப்படுகிறது.

தமிழக அரசு, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசரச் சட்டத்தை இயற்றியதை அடுத்து,  தற்போது மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. இதன்ஒருபகுதியாக, மதுரை அவனியாபுரத்தில்,  இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு  இன்று ஜல்லிக்கட்டு தொடங்கியுள்ளது.

இதில் நூற்றுக்கணக்கான காளைகளும், வீரர்களும் பங்குபெறுகிறார்கள்.

பல்வேறு  விதிமுறைகள் வகுக்கப்பட்டு, அவற்றின்படியே ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் , விதிமீறல்கள் ஏதும் நடைபெறுகிறா என்பதை அறிய டஜன் கணக்கில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொறுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

பொருத்தப்பட்டு, தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறது.

இதற்காக, பிரத்யேக கட்டுப்பாட்டு அறையும் ஏற்படுத்தியுள்ளதாக, விழாக்குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.