மெரினா: 144 விலக்கப்பட்டது… ஆனால் கூட்டம், போராட்டத்துக்கு தடை தொடர்கிறது

Must read

 

சென்னை:

மெரினா கடற்கரை பகுதியில் அமலில் இருந்த 144 தடை உத்தரவு நீக்கப்பட்டாலும், கூட்டம், போராட்டம் நடத்த தடை உத்தரவு தொடர்வதாக காவல்துறை அறிவித்துள்ளது.

ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி இளைஞர்கள் சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் நடத்திய போராட்டத்தையும், கடைசி நாளில் ஏற்பட்ட கலவரத்தையும் தொடர்ந்து, கடற்கரை பகுதியில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டது.

“கடந்த, 28 நள்ளிரவு, 2:30 மணி முதல், பிப்., 12 நள்ளிரவு, 12:00 மணி வரை, மெரினா கடற்கரையில், கலங்கரை விளக்கத்தில் இருந்து உழைப்பாளர் சிலை வரை, 144 தடை உத்தரவு அமலில்இருக்கும்” என்று காவல்துறை அறிவித்தது.

இந்த நிலையில், 144 தடை உத்தரவை காவல்துறை விலக்கியுள்ளது. அதே நேரம், மெரினா கடற்கரை பகுதியில் கூட்டம், போராட்டம் நடத்த தடை நீடிப்பதாக காவல்துறை அறிவித்துள்ளது.

 

 

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article