டில்லி

ந்தியாவில் நேற்று 59,958 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59,958 அதிகரித்து மொத்தம் 2,95,70,035 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2,732 அதிகரித்து மொத்தம் 3,77,061 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 1,17,232 பேர் குணமாகி  இதுவரை 2,82,72,780 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 9,08,547 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 8,129 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 59,17,121 ஆகி உள்ளது  நேற்று 1,592 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,12,696 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 14,732 பேர் குணமடைந்து மொத்தம் 56,54,003 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,47,354 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 6,835 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 27,71,969 ஆகி உள்ளது  இதில் நேற்று 120 பேர் உயிர் இழந்து மொத்தம் 33,033 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 15,409 பேர் குணமடைந்து மொத்தம் 25,66,774 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,72,141 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 7,719 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 27,35,959 ஆகி உள்ளது.  இதில் நேற்று 161 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,343 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 16,743 பேர் குணமடைந்து மொத்தம் 26,10,368 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,13,821 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 12,772 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 23,66,493 ஆகி உள்ளது  இதில் நேற்று 254 பேர் உயிர் இழந்து மொத்தம் 29,801 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 25,561 பேர் குணமடைந்து மொத்தம் 21,99,808 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,36,884 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 4,549 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 18,14,393 ஆகி உள்ளது.  நேற்று 59 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 11,999 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 10,114 பேர் குணமடைந்து மொத்தம் 17,22,381 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 80,013 பேர் சிகிச்சையில் உள்ளனர்.