இன்று முதல் ரேஷன் கடைகளில் ரூ.2000 இரண்டாம் தவணை வழங்கல்

Must read

சென்னை

ன்று முதல் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரணத்தொகை இரண்டாம் தவணை ரூ.2000 வழங்கப்பட உள்ளது.

தமிழக அரசு சார்பில் ரேஷன் அட்டை தாரர்களுக்கு தலா ரூ.4000 கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.  இதில் முதல் தவணையாக ரூ. 2000 சென்ற மாதம் வழங்கப்பட்டது.  இந்த மாதம் இரண்டாம் தவணை ரூ.2000 இன்று முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது.

இதையொட்டி ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று டோக்கன்கள் வழங்கி உள்ளனர்.  இன்று முதல் ரேஷன் அட்டை தாரர்கள் ரூ.2000 இரண்டாம் தவணையுடன் 14 மளிகைப் பொருட்களையும் இலவசமாக பெற்று கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

இதில் ஒரு சிலருக்கு இன்னும் டோக்கன் வழங்கப்படாமல் உள்ளது.  மேலும் சிலர் வெளியூர் சென்று விட்டு கொரோனா கட்டுப்பாடு காரணமாகத் திரும்ப இயலாதா சூழ்நிலையில் உள்ளனர். அவர்கள் இந்த மாத இறுதி வரை ரொக்கம் மற்றும் மளிகைப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.

 

More articles

Latest article