இந்தியாவில் இன்று 15,677 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

Must read

டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,28,508 ஆக உயர்ந்து 1,51,954 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 15,677 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,05,28,508 ஆகி உள்ளது.  நேற்று 189 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,51,954 ஆகி உள்ளது.  நேற்று 15,848 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,01,62,082 ஆகி உள்ளது.  தற்போது 2,10,106 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 3,579 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,81,623 ஆகி உள்ளது  நேற்று 70 பேர் உயிர் இழந்து மொத்தம் 50,291 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,309 பேர் குணமடைந்து மொத்தம் 18,77,588 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 52,558 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 408 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,29,960 ஆகி உள்ளது  இதில் நேற்று 3 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,155 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 564 பேர் குணமடைந்து மொத்தம் 9,09,058 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 8,728 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 179 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,85,616 ஆகி உள்ளது  இதில் நேற்று 4 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,138 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 219 பேர் குணமடைந்து மொத்தம் 8,76,140 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,338 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 5,490 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,31,260 ஆகி உள்ளது.  இதில் நேற்று 18 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,393 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,337 பேர் குணமடைந்து மொத்தம் 7,61,154 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 66,508 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 665 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,28,952 ஆகி உள்ளது  இதில் நேற்று 4 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,246 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 826 பேர் குணமடைந்து மொத்தம் 8,10,218 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 6,488 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

 

More articles

Latest article