சேலம்: ஏற்காடு மலையில் பேருந்து உருண்டு விழுந்து பயங்கர விபத்து  ஏற்பட்ட நிலையில், மலைப்பாதையில், 30கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் வாகனங்களை இயக்கக்கூடாது என சேலம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து நேற்று இரவு அளவுக்கு அதிகமான  தனியார் பயணிகளை ஏற்றிக்கொண்டு  சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது.  இந்த பேருந்தில், அளவுக்கு அதிகமாக பயணிகள் ஏற்றப்பட்டிருந்தனர். சுமார் 67 பயணிகள் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த பேருந்து, ஏற்காடு மலையில் இருந்து கீழே இறங்கும்போது, பேருந்து, 13 வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் பேருந்து வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு பள்ளத்தை நோக்கி பாய்ந்து விபத்திற்குள்ளானது. 13 வது கொண்டை ஊசி வளைவில் இருந்து விழுந்த பேருந்த 11 வது கொண்டை ஊசி வளைவில் வந்து நின்றது.

இந்த விபத்தில் 6 பேர் பலியான நிலையில்,  58 பேர் காயமடைந்த நிலையில், அவர்கள் சேலம் அரசு மருத்துமனை மற்றும் தனியார் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.  இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விபத்தில் சிக்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பயணிகளை மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார். அத்துடன், அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த வட்ட ஆட்சியர், ஏற்காடு மலைப்பாதையில் வாகனங்கள் 30 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லக்கூடாது என உறுதிபடுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து மலைப் பாதையில் அதிவேகத்தில் வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் வட்டாட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே மலைப்பகுதிகளில் வாகனங்களை இயக்க அனுமதிக்கப்பட்ட 30 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் செல்லும் வாகனங்கள் மற்றும் விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் தீவிரமாக கண்காணித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், கோடை காலம் என்பதால் ஏற்காட்டிற்குச் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு அனுபவம் உடைய ஓட்டுநர்கள் மட்டுமே ஏற்காடு மலைப்பாதையில் வாகனங்களை இயக்க அனுமதிக்கப்படுவர்.

இதற்கென ஏற்காடு அடிவார சோதனைச் சாவடியிலேயே காவல்துறையினர் மற்றும் வட்டாரப் போக்குவரத்துத் துறையினர் மூலம் ஆய்வு செய்த பின்னர் மட்டுமே வாகனங்களை அனுமதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.

ஏற்காடு மலையில் பேருந்து உருண்டு விழுந்து பயங்கர விபத்து – 6 பேர் பலி… 58 பேர் காயம்…