சேலம்: ஏற்காடு மலையில் பேருந்து உருண்டு விழுந்து பயங்கர விபத்து  ஏற்பட்டது. இதில்,  6 பேர் பலியான நிலையில்,  58 பேர் காயமடைந்த நிலையில், அவர்கள் சேலம் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.  இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து நேற்று இரவு அளவுக்கு அதிகமான  தனியார் பயணிகளை ஏற்றிக்கொண்டு  சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது.  பேருந்து, 13 வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் பேருந்து வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு பள்ளத்தை நோக்கி பாய்ந்து விபத்திற்குள்ளானது. 13 வது கொண்டை ஊசி வளைவில் இருந்து விழுந்த பேருந்த 11 வது கொண்டை ஊசி வளைவில் வந்து நின்றது.

இந்த பயங்கர விபத்தில் பேருந்தில் இருந்த பலர் பேருந்தில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதை கண்ட அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மற்ற வாகன ஓட்டிகள் விரைந்த வந்த மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த பேருந்தில் 69 பயணிகள் பயணித்த பேருந்தில் 6  பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் அவ்வழியாக சென்ற சுற்றுலாப் பயணிகள் ஆம்புலன்சுக்காக காத்திருக்காமல் தங்களது சொந்த வாகனங்கள் மற்றும் ஆட்டோ, மினி டெம்போ உள்ளிட்ட வாகனங்களில் ஏற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமும் மருத்துவமனைக்கு விரைந்து அனுப்பினர். 40 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டதில் 20 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன்மூலம் உயிரிழப்பு எண்ணிக்கை 6ஆக உயர்ந்தது. மேலும், சிலர் அபாய கட்டத்தில் உள்ளதால் பலி எண்ணிக்கை உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது.

பேருந்தை ஓட்டி வந்த மணி என்ற ஜனார்த்தனனுக்கு கை மற்றும் தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. வளைவில் பேருந்தை திருப்பும் போது ஸ்டியரிங் கம்பி முறிந்ததால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்தில் சிக்கியதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த  விபத்து குறித்த தகவல் அறிந்த்தும், காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர். சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி மற்றும் உயர் அலுவலர்களும் சம்பவ இடத்திற்கு சென்று பணிகளை விரைவுபடுத்தினர். மேலும் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வருவோரையும் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அதிக அளவிலான பயணிகளை ஏற்றியதாலும், அதிவேகத்தில் இயக்கப்பட்டதாலும் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதாக கூறப்படுகிறது. குறிப்பாக கோடை விடுமுறை தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. இருப்பினும் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் பேருந்து பயணம் செய்கின்றனர். வேறு வழியின்றி அரசு மற்றும் தனியார் பேருந்துகள் குறிப்பிட்ட அளவைவிட பயணிகளை அதிகமாக ஏற்றி செல்கின்றனர் என பொதுமக்கள் குற்றம் சான்றுகின்றனர். இதுகுறித்து ஏற்காடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் மணி கூறும்போது,  இநத் பேஅப்போது அவர் பேசியது, “சேலம் அரசு மருத்துவமனையில் 58 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அனுமதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான சிகிச்சை அளிக்க போதுமான வசதிகள் அரசு மருத்துவமனையில் இருக்கிறது. மேலும் போதுமான அளவு ரத்தம் இருப்பு உள்ளது இது தொடர்பாக இரத்த நன்கொடையாளர்கள் 10 யூனிட் அளவிற்கு ரத்தம் கொடுத்துள்ளனர். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் போதிய பரிசோதனை மேற்கொண்டு பின்னர் உரிய சிகிச்சை பிரிவுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றும் கூறினார்.