சென்னை

ன்று முதல் வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 19 குறைக்கப்பட்டுள்ளது

.

மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நிர்ணையித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்துள்ளது.

அதைப் போல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து கொள்கின்றன. சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.19 குறைந்து ரூ.1,911 விற்பனை செய்யப்படுகிறது.

ஆயினும் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் 14 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.818.50 ஆகவே நீடிக்கிறது.