கொல்கத்தா

ன்றைய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தென் ஆப்ரிக்க அணியுடன் மோதுகிறது.

தற்போது இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வரும் 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடக்கும் 37-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

தற்போதைய உலகக் கோப்பை தொடரில் அசைக்க முடியாத ஒரே அணியாக இந்தியா உள்ளது.  ஏற்கனவே ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காள தேசம், நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை என்று வரிசையாக வென்ற இந்தியா முதல் அணியாக அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்து புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இதுவரை தென் ஆப்பிரிக்க அணி 7 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, ஒரு தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று அரையிறுதியை உறுதி செய்து விட்டது. ஏற்கனவே இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்காள தேசம், பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளை வென்ற தென்  ஆப்பிரிக்கா தனது 3-வது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்திடம் 38 ரன் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.

இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்

இந்தியா: 

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட்கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

தென்ஆப்பிரிக்கா: 

குயின்டான் டி காக், பவுமா (கேப்டன்), வான்டெர் டஸன், மார்க்ரம், டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசென், மார்கோ யான்சென், ரபடா, கேஷவ் மகராஜ், இங்கிடி, ஜெரால்டு கோட்ஜி அல்லது தப்ரைஸ் ஷம்சி.