டில்லி

வெங்காயம் விலை உயர்ந்து வருவதால் மலிவு விலையில் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நாளுக்கு நாள் வெங்காய விலை கடுமையாக அதிகரித்து வருகிறது. எனவே கரீப் பருவப் பயிர் வரத்தில் ஏற்பட்ட தாமதம் காரணமாக வெங்காய விலை அதிகரிப்பிலிருந்து நுகர்வோரைப் பாதுகாக்க மத்திய அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

அதில் ஒன்றாக வெங்காயம், கிலோ ஒன்றுக்கு 25 ரூபாய் என்ற மானிய விலையில் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த வெங்காய விற்பனையை மத்திய பண்டகசாலை, மாநில கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களால் இயக்கப்படும்/ சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் நடமாடும் வேன்கள் மூலம் தொடங்கி உள்ளது.

ஒவ்வொரு மாநிலத்திலும் 54 நகரங்களில் 457 சில்லறை விற்பனை மையங்களில் வெங்காய விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.