ஒற்றுமையாக இருங்கள்….எம்எல்ஏ.க்களிடம் சசிகலா உருக்கம்

Must read

சென்னை:

கூவத்தூரில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதிமுக சட்டமன்ற குழு தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அவைத்தலைவர் செங்கோட்டையன் மற்றும் அமைச்சர்களும் பங்கேற்றனர்.

அப்போது சசிகலா பேசுகையில், ‘‘ கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். என்னைத்தான் சிறையில் அடைக்க முடியும். உங்கள் மீது கொண்ட பாசத்தையோ, கட்சியின் மீதான அக்கறையையோ சிறையில் அடைக்க முடியாது. நான் எந்த மாநிலத்தில் இருந்தாலும் என்னுடைய மன ஓட்டம் கட்சி மீதே இருக்கும்’’ என்றார்.

இதை தொடர்ந்து கூவத்தூரில் இருந்து சசிகலா புறப்பட்டு போயஸ்கார்டன் இல்லத்துக்கு வந்து சேர்ந்தார்.

More articles

Latest article