ஆளுநரிடம் எடப்பாடி அளித்த எம்.எல்.ஏ. பட்டியலில் போலி கையெழுத்துகள்?

Must read

னது ஆதரவு எம்.எல்.ஏக்கள் என்று அ.தி.மு.க, (சசிகலா) தரப்பின் சட்டமன்ற குழு தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரிடம் அளித்த பட்டியலில் போலி கையெழுத்துகள் இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, அக் கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். சொத்துக்குவிப்பு வழக்கில் அவருக்கு தண்டனை அளிக்கப்பட்டதால், அவரது தரப்பில் எடப்பாடி பழனிச்சாமி ச.ம.க. குழு தலைவராக நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நேற்று மாலை ஆளுநரை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, 123 எம்.எல்.ஏக்கள் தன்னை ஆதரிப்பதாக அவர்களது ஆதரவு கடிதத்துடன் கூடிய பட்டியலை அளித்தார். அந்த பட்டியலில் இரு கையெழுத்துகள் போலி என தகவல் வெளியாகியுள்ளது.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.வான முன்னாள் டி.ஜி.பி.நடராஜ். மற்றும் ம.ம.க. எம்.எல் ஏ அன்சாரி ஆகியோர் இதுவரை எந்த தரப்பையும் ஆதரிக்கவில்லை. சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள கூவத்தூர் நட்சத்திர ஓட்டலிலும் இவர்கள் தங்கவில்லை.\

ஆனால் இந்த இரு எம்.எல்.ஏக்களும் தன்னை ஆதரிப்பதாக, எடப்பாடி பழனி்ச்சாமி பட்டியலில் சேர்த்துள்ளார் என்றும், இந்த இருவரின் கையெழுத்துகளும் போலியா போடப்பட்டிருக்கின்றன என்றும் அதிரச்சி தகவல் வெளியாகி உள்ளது.

More articles

Latest article