கோயமுத்தூர்: கோவையில் கார் வெடிப்பு சம்பவத்தில் திடுக்கிடும் சதி நடைபெற்றுள்ளது அம்பலமாகி உள்ளது. அங்கு ‘ஒற்றை ஓநாய் தாக்குதல்’  என்ற முறையில் கோவை சங்கமேஸ்வரர் உட்பட 3 கோயில்களை மையப்படுத்தி குண்டு வெடிப்பு  ஒத்திகை நடத்தியதும் அம்பலமாகி உள்ளது. இது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு காவல்துறை மற்றும் தமிழக அரசின் செயலற்ற தன்மையால் இந்த வெடிகுண்டு சம்பவங்கள் அரங்கேறி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியில் கடந்த 23-ம் தேதி அதிகாலை 2மணி அளவில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா கட்சியை மத்தியஅரசு தடை செய்ததுடன், கோவையில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த சிலரையும் என்ஐஏ கைது செய்தது. அதைத்தொடர்ந்து கோவை உள்பட தமிழ்நாட்டில் பல பகுதிகளில், அந்த கட்சியை சேர்ந்தவர்கள் பெட்ரோல் குண்டு வீசி பதற்றத்தை உருவாக்கினர். இதை தமிழகஅரசும், காவல்துறையும் கண்டுகொள்ளாத நிலை இருந்தது.

இதையடுத்து, குளிர்விட்டு போன பயங்கரவாதிகள், கோவையில் 5 இடம் உள்பட தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் குண்டு வைக்க சதி செய்து வந்துள்ளனர். இந்த சதியான, கோவை உக்கடம் பகுதியில் நடைபெற்ற கார் வெடி விபத்து மூலம் அம்பலமாகி உள்ளது. கோவை கார் வெடிப்பு  சம்பவத்தில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் (25) என்ற பயங்கரவாதி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீஸார் வழக்குப்பதிந்து, முபினுக்கு உதவயிக  முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), பெரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில்(26), அப்சர்கான்(28) ஆகிய 6பேரை கைது செய்தனர். இவர்கள் பயங்கரவாத அமைப்பால் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் என கூறப்படுகிறது. இவர்களை  உபா (சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம்), கூட்டுசதி, இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிந்து கைது செய்துள்ளனர்.  கைது செய்யப்பட்டவர்களில் அப்சர்கானை தவிர, மீதமுள்ள 5 பேரை காவலில் எடுத்தும் போலீஸார் விசாரித்தனர்.

இதற்கிடையே, இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ)-க்கு மாற்றம் செய்யப்பட்டது. என்.ஐ.ஏ அதிகாரிகள் இச்சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதில், கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைதான 6 பேரில் ஒருவர் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய நபரை சந்தித்ததாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. முகமது தல்கா என்பவர் 1998ல் நடந்த கோவை தொடர் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட நவாப் கான் என்பவரின் மகன் என முன்னதாக விசாரணையில் தெரிய வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுமட்டுமின்றி,  பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றன.

மற்றொரு குற்றவாளியான ஃபெரோஸ் குறித்து வெளியாகியுள்ள தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஃபெரோஸ் என்பவர், இந்த கார் வெடிப்பு சம்பவத்திற்கு முன்னதாக கேரளாவில் சிறையில் உள்ள ரசித் அலி மற்றும் முகமது அசாருதீன் ஆகியோரை சந்தித்ததாக தெரிய வந்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டில் இலங்கை தேவாலயத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் தொடர்பில் இருந்ததாக கைதானவர்தான் இந்த முகமது அசாருதீன். இவர்களை ஃபெரோஸ் சென்று சந்தித்ததின் நோக்கம் என்ன என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுமட்டுமின்றி,, கார் வெடிப்பு சம்பவம் நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர் ஜமேஷா முபின் தன் நெருங்கிய உறவினரான அப்சர்கான், முகமது அசாருதீன் ஆகியோருடன் குண்டு வெடிக்க வைப்பது தொடர்பாக ஓரிரு முறை ஒத்திகை பயிற்சி நடத்தியுள்ளார் என்பது தெரியவந்தது.

இவர்கள் கோவை பகுதியில் உள்ள பழமையானதும், மக்கள் அதிகம் வரக்கூடிய  கோவில்களான  கோட்டை சங்கமேஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயில், புலியங்குளம் விநாயகர் கோயில் ஆகியவற்றுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று ஒத்திகை பார்த்தது தெரியவந்தது. இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகளை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். ஆனால், அதை வெளியிட போலீஸார் மறுத்துவிட்டனர்.

ஆனால், பயங்கரவாதிகள், வெடிகுண்டு வெடிப்பை நிகழ்த்தவும்,  வெடிபொருள் நிரப்பப்பட்ட வாகனத்தை எங்கு நிறுத்தலாம் என்பது போன்றவற்றை இவர்கள் கண்காணித்திருப்பார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது, மேலும், இவர்களுடன் தொடர்புடைய மேலும் 15 பேரை தேடும் பணிகள் நடைபெற்ற வருகிறது. அவர்கள்மூலம் தமிழ்நாட்டின் வேறு பகுதிகளில் குண்டுவெடிப்புக்கு  சதித் திட்டம் தீட்டியிருக்கலாம் எனவும், இதன் பின்னணியில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் எனவும் போலீஸாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது.

இதுமட்டுமின்றி குண்டுவெடிப்பில் பலியான   முபினின் வீட்டில் கைப்பற்றப்பட்ட பொருட்களை ஆய்வு செய்த போது, சிலிண்டர், வெடிபொருள், ஆணி, கோலி குண்டு ஆகியவற்றை வெடிக்கச் செய்து பெரும் சேதத்தை விளைவிக்க முபின் திட்டமிட்டிருந்ததையும் போலீஸார் கண்டறிந்துள்ளனர். மேலும், குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டவர்கள்,  காந்திபார்க், பழைய மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காஸ் சிலிண்டர் மற்றும் 3 டிரம்களை கைதானவர்கள் வாங்கியிருப்பதையும் போலீஸார் கண்டறிந்துள்ளனர். அது தொடர்பான தகவல்களையும் போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு ‘ஒற்றை ஓநாய் தாக்குதல்’ என்று அவர்கள் பெயரிட்டு இருந்தது தெரிய வந்துள்ளது. அதாவது, தீவிரவாத சிந்தனை உடையவர்்கள், தனிப்பட்ட முறையில் தாக்குல் மேற்கொள்வதே ஒற்றை ஓநாய் முறை ஆகும். இந்த வகையான தாக்குதல்களை நடத்துபவர்கள், அதற்கான பிரத்யேக பயிற்சி மற்றும் மூளைச்சலவை செய்யப்பட்டிருப்பார்கள்.

அதுபோன்று,  முபின் பிரத்யேக பயிற்சிகள் பெற்றவர் என்பது தெரிய வந்துள்ளது. இந்த ஒற்றை நாய் தாக்குதல்  ஒத்திகையின்போதுதான், சங்கமேஷ்வரர் கோவில் முன்பு எதிர்பாராதவிதமாக நடைபெற்ற  கார் வெடிப்பு சம்பவம் என்பதும் உறுதி செய்யப்பட்டு உள்ளது.