தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் படங்களுக்கு இந்தியாவில் மட்டுமன்றி மத்திய கிழக்கு மற்றும் கிழக்காசிய நாடுகள் மற்றும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் என்று பல்வேறு உலக நாடுகளில் நல்ல வரவேற்பு பெறுகிறது.

‘ஒமிக்ரான்’ வகை கொரோனா வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவ தொடங்கி இருக்கும் நிலையில், அங்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளால் இந்திய திரைப்படங்களின் வெளியீடு பாதிக்குமோ என்ற அச்சம் தயாரிப்பாளர்களிடம் எழுந்துள்ளது.

சில படங்களின் வெளிநாட்டு வெளியீடு நல்ல வசூலை ஏற்படுத்திக் கொடுக்கும் நிலையில் மெகா பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் முக்கிய நடிகர்களின் படங்கள் இம்மாதம் வரிசையாக ரிலீசாக இருக்கிறது.

இந்நிலையில், ‘ஒமிக்ரான்’ பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்பட்டால் இந்த படங்களின் வெளியீட்டிலும் வசூலிலும் பாதிப்பு ஏற்படக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

ஏற்கனவே கொரோனா காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக முடங்கிப் போயிருந்த திரைத்துறை எந்த சர்ச்சையையும் எதிர்கொள்ளும் துணிவோடும் உற்சாகத்துடம் களமிறங்கியிருக்கும் நிலையில் ‘ஒமிக்ரான்’ இவர்களை ‘ஓ மை காட்’ என்று அலற வைத்திருக்கிறது.