டிசம்பர் 4 முதல் கமல்ஹாசன் தனது வழக்கமான பணியை மேற்கொள்வார்

Must read

உலக நாயகன் கமல்ஹாசன் அமெரிக்கா சென்று வந்த பின் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தனிமையில் வைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் தற்போது உடல்நிலை தேறிவருகிறார் என்று மருத்துவமனை வட்டாரங்களும் அவரது மகள் ஸ்ருதிஹாசனும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், ராமச்சந்திரா மருத்துவமனை இன்று வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், உடல் நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதால் டிசம்பர் 4 ல் இருந்து கமல்ஹாசன் தனது வழக்கமான பணிகளை மேற்கொள்ளலாம் என்று அறிவுறுத்தியுள்ளது.

கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தற்காலிகமாக தொகுத்து வழங்கிய நிலையில் டிசம்பர் 4 சனிக்கிழமை அன்று ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சியை மீண்டும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

More articles

Latest article