சென்னை: இந்தியா – இங்கிலாந்து இடையே நடைபெற்றுவரும் முதல் டெஸ்ட் போட்டியின்போது, சென்னை சேப்பாக்கம் மைதானம், முதல் 2 நாட்கள் பேட்டிங் பிட்சாக இருந்தது. ஆனால், தற்போது மூன்றாம் நாளில் அது பெளலிங் பிட்சாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

போட்டியின் முதல் 2 நாட்களில், இந்திய பெளலர்கள் உண்மையிலேயே திணறிப் போனார்கள். பிட்ச்சின் கண்டிஷனைப் பயன்படுத்தி, இங்கிலாந்து வீரர்கள் நன்றாக ஆடிவிட்டனர். கேப்டன் ஜோ ரூட் இரட்டை சதமடித்துவிட்டார்.

இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், இங்கிலாந்து அணி 555 ரன்கள் அடித்தும்கூட டிக்ளேர் செய்யவில்லை. மாறாக, மூன்றாம் நாளிலும்கூட விடாமல் ஆடியது. கடைசியாக 578 ரன்கள் அடித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

தற்போது, இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை துவக்கியுள்ளது. துவக்கத்திலேயே ரோகித் ஷர்மாவின் விக்கெட்டை இழந்துவிட்டது. தற்போது ஷப்மன் கில், புஜரா களத்தில் உள்ளனர். சிலர் கூறுவதைப்போன்று, சேப்பாக்கம் பவுலிங் பிட்ச்சாக மாறுகையில், இந்தியாவுக்கு உண்மையிலேயே சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.