டில்லி:

ஒரு சதவீதம் பேரிடம் 73 சதவீதம் அளவிற்கு இந்தியாவின் சொத்துகள் உள்ளது என்று 2017ம் ஆண்டு வெளியான சர்வே முடிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தற்போது பிரதமர் நரேந்திர மோடி உலக பொருளாதார அமைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகருக்கு சென்றுள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘‘ அன்புள்ள பிரதமர் அவர்களே, சுவிட்சர்லாந்துக்கு உங்களை வரவேற்கிறோம். ஒரு சதவீதம் உள்ளவர்களிடம் ஏன் 73 சதவீதம் அளவிற்கு இந்தியாவின் சொத்துகள் உள்ளன? என டாவோஸ் நகர மக்களிடம் தயவு செய்து கூறுங்கள். உங்களது

உடனடி தகவலுக்காக அறிக்கை ஒன்றையும் இதனுடன் நான் இணைத்து உள்ளேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.