மும்பை:

இஸ்ரேல் பிரதமரை ஏன் காஷ்மீருக்கு அழைத்துச் செல்லவில்லை என்று பிரதமர் மோடிக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக.வுன் இனி கூட்டணி இல்லை என்று சிவசேனா இன்று அறிவித்தது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடபோவதாகவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடியை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடுமையாக விமர்சனம் செய்து பேசியுள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், ‘‘பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு மட்டுமே பயணம் செய்கிறார். அகமதாபாத்திற்கு இஸ்ரேல் பிரதமரை அழைத்துச் செல்கிறார். ஏன் அவரை காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக்கு பகுதிக்கு அழைத்து செல்லவில்லை.

மோடி ஏன் ஸ்ரீநகரில் சாலை நிகழ்ச்சி நடத்தவில்லை. லால் சவுக்கில் மோடி நாட்டின் மூவர்ண கொடியை ஏற்றியுள்ளாரா?. இதை செய்தால் நமது பிரதமர் குறித்து நாம் பெருமை அடையலாம்’’ என்றார்.