பாராளுமன்றத்தில் மக்கள் கருத்தை எழுப்பியதற்கு மன்னிப்பா? எதுக்கு மன்னிப்பு? ராகுல்காந்தி

Must read

டெல்லி: மக்கள் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் பேசியதற்கு மன்னிப்பா? ஒரு போதும் இல்லை என 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப் பட்ட விவகாரத்தில், காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் கண்ணியக் குறைவாக நடந்து கொண்ட எதிர்க்கட்சியைச் சேர்ந்த 12 எம்.பி.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். அவர்கள் இந்த  நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்து மாநிலங்களவை தலைவர் உத்தரவிட்டார். சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள 12 எம்.பி.,க்கள் மன்னிப்பு கோரினால், அவர்கள் மீதான தடை குறித்து பரிசீலனை செய்யப்படும் என நாடாளுமன்ற விவகாரங்களுக்கான துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி

இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற வளாகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தின. காங்கிரஸ் கட்சி, எஞ்சிய தொடரை புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளன.

இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, ‘எதுக்கு மன்னிப்பு? “மக்கள் பிரச்னையை நாடாளுமன்றத்தில் பேசியதற்கு மன்னிப்பா? அதற்கு ஒருபோதும் இடமில்லை என்று  இந்தியில் டிவிட் பதிவிட்டுள்ளார்.

More articles

Latest article