இந்திய கடற்படையின் புதிய தளபதியாக அட்மிரல் ஹரிகுமார் பதவியேற்றார்…!

Must read

டெல்லி: இந்திய கடற்படையின் புதிய தளபதியாக அட்மிரல் ஹரிகுமார் இன்று பதவி ஏற்றார்.

இந்திய கடற்படை தளபதியாக இருந்த அட்மிரல் கரம்பீர் சிங் பதவிக்காலம் முடிவுற்றதைத் தொடர்ந்து, புதிய தளபதியாக அட்மிரல் ஹரிகுமார் புதிய தளபதியாக நியமனம் செய்யப்பட்டார்.

தலைநகர் டெல்லியின் தெற்கு பிளாக்கில் உள்ள கடற்படை தளத்தில் நடைபெற்ற  விழாவில் இந்திய கடற்படையின் புதிய தளபதியாக ஹரிகுமார் பொறுப்பேற்றார். அவரை கடற்படை அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து வீரர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஹரிகுமார், கடற்படைத் தளபதியாக நான் பொறுப்பேற்றது பெருமைக்குரிய விஷயம். இந்திய கடற்படையின் கவனம் நமது தேசிய கடல்சார் நலன்கள் மற்றும் சவால்களில் உள்ளது என்று தெரிவித்தார்.

 

More articles

Latest article