சபையின் கண்ணியத்தைக் காக்க நடவடிக்கை எடுப்பது முக்கியம்! மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

Must read

டெல்லி: சபையின் கண்ணியத்தைக் காக்க நடவடிக்கை எடுப்பது முக்கியம் என 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்து உள்ளார்.

கடந்த ஆகஸ்டு மாதம்  நடைபெற்ற பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின்போது,  ராஜ்யசபாவில் விதிகளை மீறி கன்னியக்குறைவாக நடந்துகொண்ட காங்கிரஸ், கம்யூனிஸ்டு,  சிவசேனா எம்.பி., திரிணாமுல் கட்சிகளைச் சேர்ந்த 12 உறுப்பினர்கள்  ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்ட னர். அவர்களை, இந்த  குளிர்கால கூட்டத் தொடர்  முழுவதும் சஸ்பெண்ட் தொடரும் வகையில், பாராளுமன்ற  விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, 256 சட்டப் பிரிவின் கீழ் தீர்மானத்தை தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டது.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து  இன்று ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கேள்வி எழுப்பினார். ஆனால், அதை ஏற்க வெங்கையா நாயுடு மறுத்து விட்டார். இதையடுத்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்த எம்.பிக்கள், பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்திசிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த நலையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்,  கடந்த மழைக்கால அமர்வில் நாம் பார்த்த மாதிரியான ஒழுக்கமின்மை இதற்கு முன் எப்போதும் காணப்படவில்லை. எதிர்க்கட்சி எம்பி ஒருவர் எல்இடி திரையை சேதப்படுத்த முயன்றார், சில எம்பிக் கள் பெண் மார்ஷல்களை தாக்கினர். இதுபோன்ற ஒருங்கின்மை இதுவரை நடைபெற்றது கிடையாது. சபையின் கண்ணியத்தைக் காக்க நடவடிக்கை எடுப்பது முக்கியம் என்று தெரிவித்து உள்ளார்.

More articles

Latest article