மும்பை: பிள்ளைகளுக்கு பாலுறவு துணைவர் இருப்பதையும், அவர்கள் பொறுப்பான பாலியல் உறவு வைத்துக்கொள்வதையும் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென தெரிவித்து அதிரடியைக் கிளப்பியுள்ளார் கங்கனா ரனாத்.

ஒரு பத்திரிகை நிகழ்ச்சியில் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவரின் இந்தப் பேச்சு பல மட்டங்களிலும் அதிர்வுகளைக் கிளப்பியுள்ளது.

அவர் கூறியுள்ளதாவது, “நான் பாலுறவு விஷயத்தில் துடிப்பாக இருக்கிறேன் என்பதை அறிந்த என் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பிள்ளைகள் பாலுறவு துணைவர்களைக் கொண்டிருப்பதற்கும், பொறுப்பான பாலுறவு வைத்துக்கொள்வதற்கும் சம்மதிக்க வேண்டும்.

உடலுறவு விஷயத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்பதும், பாதுகாப்பான அம்சங்கள் கடைபிடிக்கப்பட வேண்டுமென்பதும் முக்கியம். பாலுறவு துணைவர்களை மாற்றிக்கொண்டிருப்பது நல்லதல்ல. அது உங்களின் வாழ்க்கை அமைப்பில் குழப்பத்தை ஏற்படுத்திவிடும்.

குழந்தைகள் வளர்ந்து பதின்ம வயதினராக மாறுகையில் அவர்கள் தானாக தெரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் பாதுகாப்பான உறவு வைத்துக்கொள்வதை பெற்றோர்கள் ஊக்கப்படுத்த வேண்டும்” என்றுள்ளார்.