பெங்களூரு:

நிலவின் ஆராய்ச்சிக்கு அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரை யிறங்கும் போது, அதனுடனான தகவல் துண்டிக்கப்பட்ட நிலையில், அதனுடன் தகவல் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சி மீண்டும் தொடங்கும்  என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

சந்திரயான் -2 இன் லேண்டர் விக்ரம் சந்திரனின் மேற்பரப்பில் விழுந்து கிடக்கும் நிலையில், அதனுடன்  உள்ள தகவல் தொடர்பை உயிர்ப்பிப்பதற்கான முயற்சிகளை இஸ்ரோ கைவிட வில்லை என்று மூத்த அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சுட்டிக்காட்டினர்.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி (2019) சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் ஏவியது. ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று நிலைகளை கொண்ட இந்த விண்கலம்  ஜி.எஸ்.எல்.வி. மார்க் III ஏவுகலன் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.  சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வந்து கொண்டிருந்த நிலையில்,  கடந்த  ஆகஸ்டு மாதம்  14 ம் தேதியன்று பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகி நிலவை நோக்கி நேர்கோட்டில் பயணிக்கத் துவங்கியது.

கடந்த ஜூலை 20ந்தேதி முதல், நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்து நிலவைச் சுற்றி வந்தது. அதன்படி படிப்படியாக குறைக்கப்பட்டு  கடந்த ஆகஸ்டு மாதம்  2ம் தேதியன்று, விண்கலத்தில் இருந்து லேண்டர் ஆய்வு சாதனம்  தனியாக பிரிக்கப்பட்டது.

பின்னர் அதன்  சுற்றுவட்டப்பாதை குறைத்து செப்டம்பர் 7 ம் தேதி அதிகாலை அதை தரை யிறக்கும் முயற்சிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் முன்னெடுத்தனர். ஆனால், துரதிருஷ்டவசமாக கடைசி நேரத்தில், விக்ரம் லேண்டரில் இருந்து தகவல்கள் துண்டிக்கப்பட்டது.

இது விஞ்ஞானி களுக்கு கடும் அதிர்ச்சியை அளித்த நிலையில், தொடர்ந்து விக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்தும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வந்தனர். மேலும் நாசாவும் தகவல் தொடர்பை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டது. ஆனால், அந்த நடவடிக்கைகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தது.

இதற்கிடையில், நிலவில் இரவு தொடங்கிய நிலையில், விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ளும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. நிலவில் மீண்டும் பகல் தொடங்க உள்ள நிலையில், விக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சி மீண்டும் தொடங்கும் என்று விஞ்ஞானி கள்  தெரிவித்து உள்ளனர்.

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ சிவன்,  “இப்போது அது சாத்தியமில்லை, அங்கே இரவு நேரம். இதற்குப் பிறகு அதற்சான சாத்தியக்கூறு உள்ளது. அநேகமாக நாங்கள்  மீண்டும் எங்களது முயற்சிகளை மேற்கொள்வோம் என்று தெரிவித்து உள்ளார்.

தொடர்ந்து பேசியவர்,   சந்திரயான் -2 மிகவும் சிக்கலான பணி, இது சந்திரனின் ஆராயப்படாத தென் துருவத்தை ஆராய மேற்கொண்ட முயற்சி என்றவர், ஒரு ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவற்றை இணைத்து உருவாக்கப்பட்டது என்றும் கூறினார்.

இதுகுறித்து கூறிய இஸ்ரோ விஞ்ஞானி, பல நாட்களுக்குப் பிறகு இணைப்பைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன், ஆனால் முயற்சிப்பதில் தவறில்லை” என்று  கூறினார்.

இரவு நேரங்களில் நிலவில் நிலவும் கடுமையான குளிர் நிலையை லேண்டர் தாங்க முடியுமா என்று கேட்கப்பட்டதற்கு,  “குளிர் மட்டுமல்ல, அதிக வேகத்தில் வந்து லேண்டர் அங்கு விழுந்துள்ளது… இதன் காரணமாக அதனுள் உள்ள படி கருவிகள் சேதப்பட்டிருக்கவும் வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்தார்.

லேண்டருடன் தொடர்பு இழப்புக்கான காரணத்தை ஆய்வு செய்ய கல்வியாளர்கள் மற்றும் நிறுவன வல்லுநர்களைக் கொண்ட ஒரு தேசிய அளவிலான குழுவை இஸ்ரோ அமைத்தது. இந்த குழுவினர், லேண்டர் தகவ்ல இழந்தது தொடர்பாக தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. அவர்களின் அறிக்கை விரைவில் கிடைக்கும் என்றும் அந்த விஞ்ஞானி தெரிவித்து உள்ளார்.