சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் போட்டியிட்ட தொகுதிகளின் பதிவான வாக்கு விழுக்காடு விவரம் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் புதிய உச்சமாக நேற்று (ஏப்ரல் 23) நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு புதிய வரலாற்று சாதனையை நிகழ்த்த்தி உள்ளது. இரவு 10 மணி நிலவரப்படி 84.51% (Approx 85%) வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலை விட 2026 தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் பெருமளவு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், ஸ்டாலின், எடப்பாடி உள்பட முக்கியத் தலைவர்களின் தொகுதிகளில் பதிவான வாக்கு விவரங்கள் வருமாறு:
கொளத்தூர் – மு.க.ஸ்டாலின்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் 86.11% ஆக அதிரடியாக உயர்ந்துள்ளது. கடந்த 2021-ல் 61.79% வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், இந்த முறை அதிரடியாக உயர்ந்துள்ளது.
எடப்பாடி – எடப்பாடி பழனிசாமி: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் 92.08% வாக்குகள் பதிவாகி சாதனை படைத்துள்ளது. கடந்த முறை (2021) 87.14% பதிவாகி இருந்தது.
உதயநிதி ஸ்டாலின் – சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் நிலையில், தற்போது 84.34 சதவீதமாகப் பிரம்மாண்ட உயர்வைச் சந்தித்துள்ளது. அங்கு 2021-ல் வெறும் 58.74 சதவீதமாக இருந்த வாக்குப்பதிவு நடந்திருந்தது.
தவெக தலைவர் விஜய் – பெரம்பூர், திருச்சி கிழக்கு -தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் போட்டியிட்ட சென்னை பெரம்பூர் தொகுதியில் 89.79% வாக்குகளும் (2021-ல் 63.55%), திருச்சி கிழக்கு தொகுதியில் 81.77% வாக்குகளும் (2021-ல் 67.87%) பதிவாகியுள்ளன.
நாதக சீமான் – காரைக்குடி: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் காரைக்குடியில் வாக்குப்பதிவு 74.22% ஆக உயர்ந்துள்ளது (2021-ல் 67.31%).
மத்திய அமைச்சர் எல். முருகன் – அவினாசி தொகுதியில் கடந்த முறை பதிவான 75.91 சதவீதத்தை முறியடித்து, இந்த முறை 90.57 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
சௌமியா அன்புமணி, – தர்மபுரி தொகுதியில் இந்த முறை 89.44 சதவீத வாக்குகளைப் பதிவு செய்துள்ளது. 2021-ல் 81.07 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் – திருநெல்வேலி தொகுதியில் வாக்குப்பதிவு 85.74 சதவீதமாக அதிகரித்துள்ளது.
தமிழிசை சௌந்தரராஜன் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்ட தொகுதியில் வாக்குப்பதிவு 74.81 சதவீதமாக உயர்ந்துள்ளது.
பிரேமலதா விஜயகாந்த் போட்டியிட்ட விருத்தாசலம் தொகுதியில் 86.20 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
ஓ. பன்னீர் செல்வம் – போடி தொகுதியில் வாக்குப்பதிவு 82.84 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.
அதிக வாக்குகள் பதிவாகி உள்ள மாவட்டங்களில் கரூர் தொகுதி முதலிடத்தில் உள்ளது.
கரூர் தொகுதியில் மொத்தமாக 93.40% வாக்குகளும், வீரபாண்டி தொகுதியில் 93.40% வாக்குகளும் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதுபோல குறைந்த வாககுப்பதிவு குமரி மாவட்டம் என்பது தெரிய வந்துள்ளது.
அதிக வாக்கு பதிவான மாவட்டங்கள்:
1. கரூர்: கரூர் தொகுதியில் அதிமுக எம்.ஆர். விஜயபாஸ்கர், திமுக தியாகராஜன், நாதக கருப்பைய்யா, தவெக மதியழகன் ஆகியோர் போட்டியிட்டனர். இங்கு 2,26,584 வாக்குகள் உள்ளன. இங்கு 93.40% வாக்குகள் பதிவாகி உள்ளன.
2) வீரபாண்டி: சேலம் மாவட்டத்தில் உள்ள இந்த தொகுதியில் திமுக ஏ.கே.தருண், அதிமுக பாலாஜி சுகுமார், நாதக ராஜேஷ், தவெக பழனிவேல் ஆகியோர் போட்டியிட்டனர். இங்கு 2,50,449 வாக்குகள் உள்ளன. இங்கு 93.40% வாக்குகள் பதிவாகி உள்ளன.
3. குளித்தலை: கரூர் மாவட்டத்தில் உள்ள இந்த தொகுதியில் திமுக எஸ்.ஏ சந்திரன், அதிமுக கருணாகரன், நாதக நன்மாறன், தவெக ஜி. பாலசுப்பிரமணி ஆகியோர் போட்டியிட்டனர். இங்கு 2,21,988 வாக்குகள் உள்ளன. இங்கு 92.79% வாக்குகள் பதிவாகி உள்ளன.
4. குமாரபாளையம்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள இந்த தொகுதியில் திமுக பாலு, அதிமுக பி.தங்கமணி, நாதக யுவராணி, தவெக சி. விஜயலட்சுமி ஆகியோர் போட்டியிட்டனர். இங்கு 2,17,224 வாக்குகள் உள்ளன. இங்கு 92.65% வாக்குகள் பதிவாகி உள்ளன.
5. பாலக்கோடு: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள இந்த தொகுதியில் அதிமுக கே.பி. அன்பழகன், திமுக செந்தில்குமார், நாதக பூபதி, தவெக கோபி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இங்கு 2,40,322 வாக்குகள் உள்ளன. இங்கு 92.57% வாக்குகள் பதிவாகி உள்ளன.
6. சங்ககிரி: சேலம் மாவட்டத்தில் உள்ள இந்த தொகுதியில் அதிமுக வெற்றிவேல், திமுக மணிகண்டன், தவெக செந்தில் குமார் குமரவேல், நாதக நித்யா அருண் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இங்கு 2,58,678 வாக்குகள் உள்ளன. இங்கு 92.53% வாக்குகள் பதிவாகி உள்ளன.
7. பெருந்துறை: ஈரோடு மாவட்டத்தில் உள்ள இந்த தொகுதியில் அதிமுக எஸ்.ஜெயகுமார், திமுக என்.டி. வெங்கடாசலம், நாதக லோகு, தவெக வி.பி. அருணாசலம் ஆகியோர் போட்டியிட்டனர். இங்கு 2,12,084 வாக்குகள் உள்ளன. இங்கு 92.47% வாக்குகள் பதிவாகி உள்ளன.
8. கிருஷ்ணராயபுரம்: கரூர் மாவட்டத்தில் இந்த தொகுதியில் திமுக சி.கே. ராஜா, அதிமுக திவ்யா, நாதக வி.சத்யா, தவெக எம். சத்யா ஆகியோர் போட்டியிட்டனர். இங்கு 2,02,087 வாக்குகள் உள்ளன. இங்கு 92.45% வாக்குகள் பதிவாகி உள்ளன.
9. மதுராந்தகம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள இந்த தொகுதியில் திமுக அமுலு பொன்மலர், அதிமுக மரகதம், நாதக ஜானகிராமன், தவெக எழில் கேத்ரின் ஆகியோர் போட்டியிட்டனர். இங்கு 2,12,638 வாக்குகள் உள்ளன. இங்கு 92.28% வாக்குகள் பதிவாகி உள்ளன.
10. திருப்பூர் தெற்கு: அதிமுக கூட்டணியில் பாஜக தங்கராஜ், திமுக தினேஷ்குமார், நாதக தினேஷ், தவெக பாலமுருகன் ஆகியோர் போட்டியிட்டனர். இங்கு 90.71% வாக்குகள் பதிவாகி உள்ளன.
[youtube-feed feed=1]