டெல்லி: தமிழக வாக்குப்பதிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஒவ்வொரு வாக்காளருக்கும் சல்யூட்.. என குறிப்பிட்டுள்ளார்.

தமிழகம் மற்றும் மேற்கு வங்காளத்தில் 2026 ஏப்ரல் 23 அன்று நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், சுதந்திரத்திற்குப் பிறகு இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிக வாக்குப்பதிவு (Record Voter Turnout) பதிவாகியுள்ளது. இதற்காக, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் (Gyanesh Kumar) அந்தந்த மாநில வாக்காளர்களுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்
தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. ஏற்கனவே 3 மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 23) தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4 திங்களன்று எண்ணப்படுகிறது.
ஏப்ரல் 23ந்தேதி தமிழகம் மற்றும் மேற்கு வங்காளத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வாக்குகள் பதிவாகி உள்ளன. இது வரலாற்று சாதனையாக பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து, ஒவ்வொரு வாக்காளருக்கும் ஆணையத்தின் சல்யூட் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சுதந்திரத்துக்கு முன் இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகம், மேற்கு வங்காளத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. தமிழகம் மற்றும் மேற்கு வங்காளத்தின் ஒவ்வொரு வாக்காளருக்கும் ஆணையத்தின் சல்யூட்” என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4 திங்களன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]