மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் புகழ்பெற்ற வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன் அணியை பந்தாடியது சிஎஸ்கே. 103 ரன்கள் வித்தியாசத்தில்  சிஎஸ்கே அசத்தல் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் சென்னை அணி மும்பை அணியை 103 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இது அதிக ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாகும்.

ஏப்ரல் 23, 2026 அன்று  மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற IPL 2026-இன் 33-வது போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணியை 103 ரன்கள் என்ற மிகப்பெரிய வித்தியாசத்தில் வீழ்த்தியது.

சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்காமல் 101* (54) ரன்கள் குவித்து CSK அணியை 207/6 என்ற ஸ்கோருக்கு உயர்த்தினார்; இதைத் தொடர்ந்து, அகீல் ஹொசைன் 4/17 என்ற பந்துவீச்சுடன் அசத்தி, MI அணியை 104 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழக்கச் செய்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் வான்கடே மைதானத்தில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.  இருந்தாலும் இந்த சிறப்பு  வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளிப் பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியது.

ஐபிஎல் தொடரில் ஏற்கன சிஎஸ்கே மும்பை இந்தியன்ஸ் ஆகிய  இரு அணிகளும் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள நிலையில், ஐபிஎல் தொடரில் இந்த அணிகள் மோதுவது ’el classico’ போட்டியாக கருதப்படுகிறது.

அந்த வகையில் நேற்று (ஏப்ரல் 23)  நடைபெற்ற போட்டியில்,  சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.  தமிழ்நாட்டில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வந்ததால், பெரும்பாலோர், போட்டியை காணுவதில் ஆர்வம் காட்டாத நிலையிலும், சிஎஸ்கே அணி அசத்தலாக விளையாடியது.

சென்னை பேட்ஸ்மென்கள் ஆரம்பம் முதலே அடித்து ஆடினர். இந்த சீசன் தொடக்கம் முதலே பொறுமையாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி காட்டினார். ஆனால் நீண்ட நேரம் நிலைக்காமல் 22 ரன்களுக்கு அவுட்டானார். பின்னர் வந்த வீரர்கள் சர்ஃப்ராஸ் கான் (14), பிரேவிஸ் (21), கார்த்திக் சர்மா (18) என அனைவரும் வந்த வேகத்தில் சிக்சர், பவுண்டரிகள் என விளாசி அவுட்டாகினர்.

ஆனால் மறுமுனையில் சிஎஸ்கே அணிக்கு தூணாக நின்று சாம்சன் சதம் அடித்தார். இன்னிங்ஸின் கடைசி பந்து வரை அதிரடியாக ஆடிய சாம்சன் (101*) ஐபிஎல் போட்டிகளில் சாம்சன் தனது 5வது சதத்தை பதிவு செய்தார். அவரது ஆட்டத்தின்மூலம் சிஎஸ்கே  207 ரன்களை எடுத்தது.

இதையடுத்து களமிறங்கியமும்பை அணி  சிஎஸ்கே பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அகேல் ஹொசைன், நூர் அகமது சுழல் ஜாலத்தில் மும்பை பேட்ஸ்மென்கள் அடுத்தடுத்து நடையை கட்டினர். அகேல் ஹொசைன் 4 விக்கெட்கள் வீழ்த்தினார். இறுதியில் மும்பை அணி 104 ரன்களுக்கு அவுட்டாக சென்னை அணி 103 ரன்களில் எளிதாக வென்றது.

இந்த வெற்றியின் மூலம் சிஎஸ்கே அணி புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியது. மேலும் சிஎஸ்கே அணி மும்பைக்கு எதிராக பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. மும்பை அணியை 103 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது, ஐபிஎல் தொடரில் சென்னை அணி அதிக ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாகும்.

அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தங்களது சொந்த மைதானத்தில் கிடைத்த மோசமான தோல்வி ஆகும். முன்னதாக வான்கடே மைதானத்தில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதே ரன்கள் விகிதத்தில் கிடைத்த மோசமான தோல்வியாக இருந்தது.

அதேபோல் வான்கடே மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளில் அதிக வெற்றியை பெற்ற அணிகள் பட்டியலில் சிஎஸ்கே (14 போட்டிகள், 6 வெற்றிகள்) இரண்டாவது இடம் பிடித்துள்ளது. முதலிடத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி (11 போட்டிகள், 6 வெற்றி) உள்ளது.

சிஎஸ்கே அணிக்கு எதிரான படுதோல்வி மூலம் மும்பை அணி வான்கடே மைதானத்தில் 2017 சீசனுக்கு பிறகு தொடர்ச்சியாக மூன்று முறை தோற்றுள்ளது. கடந்த 2017 சீசனில் 4 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வி அடைந்தது. மேலும் இம்முறை வான்கடே மைதானத்தில் ’ஹாட்ரிக்’ தோல்வி அடைந்து சோதனையான சாதனையையும் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]