சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில்  போட்டியிடாதபோது எதற்கு பிரசாரம்? என ஆம்ஆத்மி கட்சிக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி போட்டியிடவில்லை. எந்த கட்சிக்கு ஆதரவு என்றும் அறிவிக்கவில்லை. இந்த நிலையில்,  தமிழக அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய அனுமதி கோரி, தேர்தல் ஆணையத்தில் ஆம்ஆத்மி கட்சி சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது. அது, தேர்தல் ஆணையரால் நிராகரிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, தேர்தல் ஆணையம் அனுமதிக்க உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வதுழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தலைமைநீதிபதி அமர்வு,  “தேர்தலில் போட்டியிட உங்களிடம் வேட்பாளர்கள் இல்லாதபோது பிரச்சாரம் செய்வதில் என்ன பயன்?” எதற்கு பிரசாரம் என கேள்வி எழுப்பியதுடன், அனுமதி கோரி, அதற்குரிய தனிப்பட்ட தேர்தல் அதிகாரிகளை அணுகுமாறு கூறி வழக்கை ஒத்திவைத்தது.