சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ள நிலையில், எம்ஜிஆர் காலத்தில் இருந்து அதிமுகவுக்காக உழைத்த விகே சசிகலா, டிடிவி தினகரன் உள்பட அனைவரும் கட்சிக்காக ஒன்றிணைய வேண்டும் என ஓபிஎஸ், அழைப்பு விடுத்துள்ளார். இதன் காரணமாக ஓபிஎஸ்ன் தர்மயுத்தம் கேலிக்குரியதாகி உள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வரிடம் வேலைக்காரியாக பணியில் சேர்ந்து, பின்னாள் உதவியாளராக இருந்து வந்த சசிகலா, தனது குடும்பத்தினரை கட்சிக்குள் இறங்ககி மன்னார்குடி மாஃபியாக செயல்பட்டு வந்தார். இதனால், அவர்மீதும், அவரது குடும்பத்தினர் மீது ஏராளமான புகார்கள் உள்ளன. சசிகலாவும் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றார். அவர்மீதும், அவரது குடும்பத்தினர் மீது இன்னும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதுபோல, கட்சிக்கு எதிராக செயல்பட்டு முறைகேடுகளில் ஈடுபட்டதாக சசிகலாவின் உறவினர் டிடிவி தினகரனை ஜெயலலிதா கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்திருந்தார். ஆனால், ஜெ.மறைவுக்கு பிறகு கட்சியை அதிரடியாக கைப்பற்றி, முதல்வர் பதவியில் அமர ஆசைப்பட்ட சசிகலா, டிடிவி தினகரனை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொண்டதுடன், தன்னை பொதுச்செயலாளராக நியமித்துக்கண்டார்.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற அரசியல் சதிராட்டத்தில், அப்போதைய முதலமைச்சர் ஓபிஎஸ் இடம் இருந்து கட்டாய ராஜினாமா வாங்கப்பட்டது. இதனால் வெகுண்டெழுந்த ஓபிஎஸ், இதே சசிகலாவுக்கு எதிராகத்தான் ஜெ.சமாதிக்கு சென்று தர்மயுத்தம் செய்து, கட்சியை உடைத்தார். பின்னர் சசிகலா முதல்வராக அமர வைத்த எடப்பாடியுடன் சமரசம் செய்துகொண்டு, ஆட்சி அதிகாரத்தை அனுபவித்து வந்தார். ஆனால், இரு தலைமைக்கும் இடையே முழுமையான ஒற்றுமை இல்லாததால், கட்சி தேர்தலில் தோல்வியை தழுவி ஆட்சியை பறிகொடுத்தது. இதனால், ஏற்பட்ட முட்டல் மோதல் தீவிரமடைந்து, மீண்டும் உடையும் நிலை உருவானது.
ஆனால், கட்சி உடைவதை தடுக்கும் வகையில் உயர்நீதிமன்றம், இபிஎஸ் ஓபிஎஸ் இருவரையும் இணைந்து கட்சியை நடத்தும்படி உத்தரவிட்டு உள்ளது. ஆனால், இது தனக்கு கிடைத்த வெற்றி என்று கூறும் ஓபிஎஸ், உடனே தனது சாதிப்பாசம் காரணமாக, சசிகலா தரப்பினருக்கு அழைப்பு விடுத்துள்ள்ளர். இது அதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழ்நாட்டை கொள்ளையடித்த மன்னார்குடி மாஃபியாக்களான குற்றவாளிகளையும், கொள்ளைக்காரர்களையும், தனது சமூகம் என்ற நோக்கில் ஒபிஎஸ் மீண்டும் அதிமுகவில் இணைய அழைப்பு விடுத்துள்ளது, ஓபிஎஸ் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளது. ஓபிஎஸ் தர்மயுத்தம் வெறும் நாடகம்தானா என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. அதிமுகவுக்கு சாதிச்சாயம் பூச ஓபிஎஸ் முயல்வதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
ஏற்கனவே டிடிவி தினகரனின் அமமுக ஒரு சமூகத்தினருக்காக தொடங்கப்பட்ட கட்சி என விமர்சிக்கப்பட்டது. ஒரு சமூகத்தை சேர்ந்தவர்களின் பிரதிநிதிதுவத்திற்காக தொடங்கப்பட்ட கட்சி என்பதால் அவர்களை மட்டுமே நம்பி வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டனர். இதனால்தான், அந்த கட்சி சட்டமன்ற தேர்தலில் செல்லாக்காசானது. அதுபோல ஒரு நிலையை அதிமுகவுக்கு ஏற்படுத்தி விடக்கூடாது என்று அரசியல் விமர்சகர்கள் அறிவுரை கூறி வருகின்றனர்.
அதிமுகவில் சசிகலாவை மீண்டும் இணைப்பதற்கான வாய்ப்பே இல்லை – எடப்பாடி பழனிசாமி
அதிமுகவின் தலைமை பதவிக்கு நான் வரவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்! சசிகலா