அதிமுக ஒரே இயக்கம்தான் – அதிமுக விதிகளை துச்சமாக நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள்! ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி

Must read

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், நீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது என்றும், அதிமுக விதிகளை துச்சமாக நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள், பிரிந்து சென்றவர்கள் இணைத்துக்கொள்ளப்படுவார்கள், அதிமுக ஒரே இயக்கம்தான், அதிமுகவில் இனி வசந்தகாலம்தான் என ஓபிஎஸ் பரபரப்பாக பேட்டி அளித்துள்ளார்.

ஜூலை 11ம் தேதி ஈபிஎஸ் நடத்திய அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. உயர்நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து எடப்பாடி தரப்பினர் சுவிட் வழங்கியும்,  பட்டாசு வெடித்தும் கொண்டாடி மகிழ்ந்தனர். இதையடுத்து,  சென்னை மெரினாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது, இந்த தீர்ப்பை ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களுக்கு காணிக்கையாக்குகிறோம். இந்த  வெற்றி அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி. தொண்டர்களின் இயக்கமாக அதிமுகவை உருவாக்கினார் எம்.ஜி.ஆர். யாரும் வெல்ல முடியாத இயக்கமாக உருவாக்கினார் ஜெயலலிதா. தொண்டர்களின் இயக்கத்தை பிளவுபடுத்த யார் நினைத்தாலும் அது நடக்காது.

அதிமுக விதிகளை துச்சமாக நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள் என்பது இந்த தீர்ப்பு மூலம்  நிரூபிக்கப்பட்டுள்ளது. கழகத்தின் கசந்த காலங்கள் இனி வசந்த காலங்களாக மாறும். மேலும் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற எண்ணம் கொண்ட தொண்டர்களை ஒருங்கிணைத்து செல்வேன் என்றவர்,  அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என கூறினார்.

சென்னை உயர்நீதிமன்றம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பளித்து நாங்கள் நடப்போம். எம்ஜிஆர், ஜெயலலிதா செய்த தியாகங்களை மனதில் வைத்து செயல்படுவோம். தொண்டர்கள் விரும்பியது நடந்திருக்கிறது; தீர்ப்பை ஒன்றரைக் கோடி தொண்டர்களுக்கு காணிக்கையாக அளிக்கிறோம். அதிமுகவை யார் பிளவுபடுத்த நினைத்தாலும் நடக்காது. அவர்கள் தரப்பு, எங்கள் தரப்பு என்ற பாகுபாடு இல்லை; அதிமுக ஒரே இயக்கம்தான். விமர்சனங்களை தாங்கிக்கொள்ளும் பக்குவம் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு இருக்கவேண்டும்.

அதிமுகவின் கொள்கைக்கு இசைந்து வருபவர்கள் இணைத்து கொள்ளப்படுவார்கள் அதிமுக ஒரே தரப்பு தான்; இருதரப்பு என்பதே கிடையாது.  அனைவரையும் அரவணைத்து செல்வது தான் தலைமைக்கு இருக்க வேண்டிய பண்பு எம்ஜிஆர், ஜெயலலிதா செய்த தியாகங்களை மனதில் வைத்து செயல்படுவோம்  அனைவரையும் அரவணைத்து செல்வதுதான் தலைமைப் பண்பு. எதிர்கால நடவடிக்கைகள் அனைத்தும் தொண்டர்களின் விருப்பப்படியே இருக்கும். எம்ஜிஆர், ஜெயலலிதா செய்த தியாகங்களை மனதில் வைத்து செயல்படுவோம். ஜூன் 23ம் தேதிக்கு முன் யாரெல்லாம் கட்சியில் இருந்தார்களோ அவர்கள் தொடர்ந்து கட்சியில் இருப்பார்கள். அதிமுகவின் கொள்கைகளுக்கு இசைந்து வருபவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

அப்போது செய்தியாளர்கள் ஜூன் 23ந்தேதிக்கு பிறகா, முந்தைய நிலையா என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஓபிஎஸ்,  ஜூன்-23 பொதுக்குழுவிற்கு முன்பிருந்த நிலையே அதிமுகவில் தொடரும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது என்று தெளிவுபடுத்தினார்.

More articles

Latest article