சென்னை; ‘அதிமுக எதிர்க்கட்சியாக செயல்படவில்லை’ அதிமுகவின் தலைமை பதவிக்கு நான் வரவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் உடன்பிறவா தோழி சசிகலா, தனது ஆசையை வெளியிட்டு உள்ளர்.

சொத்துக்குவிப்பு முறைகேடு வழக்கில் சிக்கி, 4 ஆண்டுகளை சிறை தண்டனை பெற்றதுடன், கோடி கணக்கான ரூபாய் அபராதம் செலுத்திவிட்டு, தண்டனை காலம் முடிந்து வெளியே வந்த சசிகலா அதிமுகவை கைப்பற்ற திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறார். ஆனால், அவர்மீது அடுத்தடுத்தாக பாய்ந்து வரும் வழக்குகள், அவரை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது சரி வந்துள்ள நீதிமன்ற தீர்ப்பு காரணமாக, அவரது அரசியல் பிரவேசம் தள்ளாடிக்கொண்டிருக்கிறது. இருந்தாலும், ஆன்மிகப் பயணம் என்ற பெயரில் ஊர் ஊராக சென்று கோவில்களுக்கு சென்று தரிசன்ம் செய்து வருவதுடன், அந்த பகுதி அதிமுக நிர்வாகிகளையும் சந்தித்து பேசி வருகிறார். மேலும், தனது முக்குலத்தோர் அமைப்பினரை ஒன்றிணைத்து, தனக்கு ஆதரவாக திரட்டும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தேர்தலுக்கு முன்பாக, அரசியலிலிருந்து ஒதுங்கிக் கொள்வதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுப் பரபரப்பை உண்டாக்கினார். பின்னர் சில நாட்கள் கழித்து, அம்மாவின் உண்மையான தொண்டர்கள் ஒன்றுபட்டு, இந்தத் தேர்தலில் அமோக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்கப் பாடுபட வேண்டும்” எனப் பேசினார். அதைத்தொடர்ந்து சமீப மாதங்களாக அவர், செய்த பாவங்களை போக்க ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், இன்று சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று வாழ்த்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், தற்போது, அதிமுகவில்  இருப்பவர்களை மறைந்த முதல்வர் ஜெயலிலதாவுடன் ஒப்பிட முடியாது. ஒரு கட்சிக்கு, ஒரு இயக்கத்துக்கு தலைவரை கட்சித் தொண்டர்கள் முடிவு செய்ய வேண்டும். அவர் தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு தலைவராக இருந்தால்தான் அந்த தலைமையின் கீழ் அனைவரும் கட்டுப்பட்டு இருப்பார்கள். அதிமுகவில் தற்போது அதுபோன்ற நிலை இல்லை.

எனது சுற்றுபயணத்தின்போது கட்சித் தொண்டர்களை மட்டுமின்றி, பொதுமக்களையும் பார்க்கிறேன், அப்போது அவர்கள் தங்களது  குறைகள் அனைத்தையும் என்னிடம் கூறுகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்து ஒரு வருடமாகிவிட்டது. ஆனால், அவர்கள் மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்று மக்கள் கூறுகின்றனர். அவர்களிடம் விரைவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்போம் என்று கூறினேன்.  அதிமுக எந்த வகையிலுமே எதிர்க்கட்சியாக செயல்படவில்லை என்பதுதான் பொதுவான மக்கள் கருத்தாக உள்ளது இருக்கிறது  என்றும் கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடன் கேள்விக்கு பதில் அளித்தவர்,  அதிமுக பொதுக்குழு விரைவில் கூடவுள்ளது. அக்கூட்டத்தில் இப்போதைய பொறுப்பாளர்கள் என்ன செய்தாலும், ஒரு கருத்துக்கு அவர்களால் வரமுடியாது என்று கூறியதுடன்,  அவர்களுடன்  தொண்டர்கள் இல்லை. அதிமுகவில் எனக்கு எதிராக யாரும் பேசவில்லை, ஒருசிலர் பேசுகின்றனர். அவர்கள் ஏதாவது ஒரு பதவி கிடைக்கும் என்பதற்காககூட பேசலாம் இல்லையா? என்னை கட்சியில் சேர்க்கக்கூடாது என சொல்வதற்கு இவர்கள் யாரு,  நான் அதிமுகவில் இணைவது தொண்டர்களின் கையில்தான் உள்ளது. தொண்டர்கள் என்ன நினைக்கிறார்களோ, அதுதான் வெற்றி பெறும்

இந்த இயக்கத்தை ஆரம்பித்த நிறுவனர் தலைவர் எம்ஜிஆர், இந்த இயக்கத்துக்கு யார் தலைமை வகிக்க வேண்டும் என்பதை தொண்டர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறியிருக் கிறார். அதன்படி பார்க்கும்போது, தொண்டர்கள்தான் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். அதனால், நான் தலைமைக்கு வரவேண்டும், என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

முதலமைச்சரின் நிர்வாக திறமையின்மை காரணமாகவே தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை அதிகரித்து வருகிறது, முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை என்றும் குற்றம் சாட்டினார்.

காவிரியிர் முன்கூட்டியே நீர் திறப்பு பணி குறித்த கேள்விக்கு பதில் கூறிய சசிகலா, தூர்வாரும் பணி முடிவடைவதற்கு முன்பு நீர் திறக்கப்பட்டு உள்ளதால், தூர்வாரும் பணி எப்படி நடைபெறும் என்றும் கேள்வி எழுப்பினார்.

இவ்வாறு கூறினார்.