வார ராசிபலன் 23-02-18 முதல் 01-03-18 வரை : வேதா கோபாலன்

மேஷம்

போன வாரம் இருந்த உடல் சுகவீனங்களும் மன சஞ்சலங்களும் இப்போ இருந்த இடம் தெரியாமல் போயிருக்குமே. உங்களுக்கு மட்டுமில்லாமல் உங்க மனைவி/ கணவருக்கு இருந்து வந்த டென்ஷன்களும் ஓடியே போச். பழையபடி உங்க அதிகாரம் தூள் பறக்கும். அடக்கி வாசிங்க. வயிறு சம்பந்தமான பிரச்சி னைகள் வராதபடி உணவு விஷயத்தில் வாயைக்கட்டி வயிற்றைக்கட்டி கவனமா இருங்க. இன்னும் கேட்டா பத்திய சாப்பாடுகூட பெட்டர்தான். நல்ல லாபங்களும் வருமானமும் வரும். பழைய பாகிகளும் அரசாங்க நன்மைகளும் கிடைக்கும். பாஸ்போர்ட், விஸா கிடைக்கும்.

ரிஷபம்

அம்மா அப்பா பற்றி இருந்த கவலைகளும் டென்ஷன்களும் தீரும். உத்யோகத்தில் நீண்ட கால எதிர்பார்ப்பு ஒன்று மகிழ்ச்சிகரமாக நிறைவேறும்.   கணவன் மனைவிக்குள் ஒற்றுமையும் சந்தோஷமும் திடீர்னு உருவாகும். உங்களுக்கு எப்பவுமே உள்ள கவர்ச்சி அம்சம் மேலும் அதிகமாகி அலுவலகத்தில் உங்க முக்கியத்துவத்தையும் செல்வாக்கையும் அதிகரிக்கும். எதிர்பானத்தின் உதவி கிடைக்கும். பாஸ்போர்ட் விஸாவுக்குக்காத்திருக்கீங்களா.. அல்லது அவற்றைப் புதுப்பிப்பதில் தாமதமும் டென்ஷனும் இருந்ததா? இனி விரைவில்

மிதுனம்

முதல் முக்கியத்துவம் ஆரோக்யத்துக்குத்தாங்க குடுக்கணும். ஆனாலும் அதை நீங்க ரொம்பவே அலட்சியப்படுத்தறீங்க.. முக்கியமா யாராச்சும் கெட்ட பழக்கங்களை உங்களுக்குக் கற்றுக்கொடுக்க முயற்சி செய்தால் அவங்க கிட்டேயிருந்து பல மைல்கள் விலகிடுங்க. பகைவர்கள் நண்பர்களாவது மட்டுமல்ல.. உதவியும் செய்வாங்க… டாடிக்கு நன்மையெல்லாம் நடக்கும். பேசாமல் இருப்பது ரொம்பவும் நல்லதுங்க. சாப்பிட மட்டுமே வாயைத்திறந்தால் உத்தமம். பிரத்ர்ஸ் சிஸ்டர்ஸ் புகழ் பெறுவாங்க. வங்கி வேலை அல்லது வெளிநாட்டு வேலை கிடைக்கும்.

கடகம்

கல்வியோ தொழிலோ உத்யோகமோ.. எதுவாயினும் மேம்பாடுதான்..  குழந்தைங்க வாழ்க்கையில் திடீர் முன்னேற்றம் இருக்கும். அலுவலகத்திலும் குடும்ப விவகாரங்களிலும் புத்திசாலித்தனமாக டிஸைட் செய்து வெற்றி இலக்கை டச் பண்ணிடுவீங்க. பல காலம் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்த நண்பர்க ளும் உறவினர்களும் நெருங்கி வந்து தொடர்பைப் புதுப்பிப்பாங்க. மனசுக்கு நிறைவு தரும் நிகழ்ச்சிகள் நடக்கும். அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு ஆதாயம் கிடைக்க இன்னும் சிறிது காலம் காத்திருந்தால் போதும்.

சிம்மம்

அருமையான அதிருஷ்டங்கள் வாய்க்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பகைவர்களை அநாயாசமாக வெற்றி கொள்வீர்கள். உத்தியோகத்தில் திடீர் அதிருஷ்டமும் அதிசயமும் உண்டு. நண்பர்க ளின் புத்திசாலித்தனத்தால் நன்மை ஏற்படும்.  பகைவர்களால் சிறு தொல்லைகள் இருக்கலாம். அவர்களைச் சீண்டாமல் கவனமா இருங்க. குழந்தைங்க டென்ஷன் செய்வாங்க. கொஞ்சம் பொறுத்துக்கு குங்க. இப்போ பொறுமையை இழந்து பிற்பாடு வருத்தப்படுவதைவிட இப்போ பல்லைக்கடிச்சுப் பொறுத்துக்கிட்டு இருந்து பிறகு நிம்மதியடைவது புத்திசாலித்தனம்தானே? கரெக்டா?

கன்னி

அப்பாடா. இத்தனை காலம் காத்திருந்ததற்கு என்ன ஒரு அற்புதப்பலன். பெருமையும், வெற்றியும், புகழும் தேடி வரும். மனசுக்கு நெருக்கமானவர்கள் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவாங்க. சகோதர சகோதரி களின் அன்பும் ஆதரவும்… ஏன்.. உதவியும்கூடக் கிடைக்கும். லாபங்கள் அதிகரிக்கும். குறிப்பாக வெளிநாட்டுப் பணம் வரும். நண்பர்களின் நெருக்கம் நன்மை தரும். காதலில் சிறு வருத்தங்கள் ஏற்படக்கூடும். கணவன் மனைவிக்கிடையே சின்னச்சின்ன சண்டைகள் ஏற்பட்டாலும் பொருட்படுத்தாமல் அடுத்த வேலையைக் கவனிச்சுக்கிட்டே போங்க.

துலாம்

பேச்சில் மகா கவனமாயிருங்க. வாயில் ஒரு ஃபில்ட்டர் போட்டுகிட்டா இன்னுமே நல்லது. ”டென்ஷனே தான் வாழ்க்கையா?” என்றெல்லாம் புலம்பாதீங்க. எல்லாம் கடந்து செல்லும் மேகம்ஸ். ஆரோக்யம் இவ்ளோ நாள் இருந்ததைவிட மிக நன்றாய் மேம்படும். மம்மியின் ஆரோக்யத்தில் கவனமாயிருப்ப்து முக்கியங்க. குழந்தைங்க வாழ்வில் சந்தோஷ நிகழ்ச்சிகள் நடக்கும். அவங்க முன்னேற்றம் உங்களுக்குப் பெருமிதம் தரும். கோபம் வந்து கணவரை/ மனைவியை சத்தம் போடாதீங்க. அனேகமாய்த் தவறு உங்க பேர்லதான் இருக்கும்.

சந்திராஷ்டமம்: 22.02.2018 முதல் 24.02.2018

விருச்சிகம்

கல்வி சம்பந்தமான புதிய வேலை கிடைக்கும். நூல்/ புத்தகம் விற்பனை.. பதிப்பு..  கல்வி சம்பந்தமான புத்தகங்கள் எழுதுபவர்களுக்கு அருமையான அதிருஷ்ட நேரங்க. பேச்சு.. சண்டை.. விவாதம்… வாக்குவாதம்.. சாபம் என்று எதற்காகவும் வாயைத் திறக்காமல்… வாழ்த்துவற்கு மட்டுமே வாய் திறங்க. எது பேசினாலும் அதன் பலன் ஷூரா உங்களுக்கு ரிடர்ன் ஆகும். எனவே நல்லதைப் பேச வேண்டிய கட்டாயத்தில் இருக்கீங்க. சகோதர சகோதரிகளுக்கு மிகவும் உதவியா இருந்து மிகவும் பாராட்டு, ஆசி எல்லாம் வாங்குவீங்க.

சந்திராஷ்டமம்: 24.02.2018 முதல் 26.02.2018

தனுசு

பேச்சினால் மற்றவர்களுக்குக் கற்பிப்பீங்க. நண்பர்கள் உங்களுக்கு குருவாக இருந்து நல்ல விஷயங்க ளில் அட்வைஸ் செய்து நன்மை செய்வாங்க. டாடிக்கு அரசாங்க நன்மை உண்டு. அவருடைய செல்வாக் கும் புகழும் அதிகரிக்கும். நீங்க காத்திருந்த பாஸ்போர்ட் அல்லது விசா கிடைக்கும். ஆரோக் யத்துக்கு முக்கியத்துவம் குடுங்க. வருமுன் காக்கலாம். முக்கியமா ஜீரண உறுப்புகள் கெடாமல் பாதுகாக்க வேண்டும். கெட்ட பழக்கங்கள் கிட்டே வராமல் ஒதுங்குங்க. கல்வியில் சாதனை செய்வீங்க. திடீர் நண்பர்கள் கிட்ட சற்றே ஜாக்கிரதையா இருங்க.

சந்திராஷ்டமம்: 26.02.2018 முதல் 28.02.2018

மகரம்

கோயில் குளம்னு போவீங்க. ஆசிரியர் மாதிரி நீங்க நினைக்கறவங்களோட ஆசி கிடைக்கும்படியான காரியங்கள் செய்வீங்க.  எந்த விஷயத்துக்கும் மனசு தளர்ந்து விரக்தி நிலையை எட்டிடாமல் பார்த்துக்குங்க. பேச்சில் கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும். பலநாள் காத்திருந்து கைவிட்ட விஷயங்கள் நடக்கும்…. திருமணம் உள்பட. செலவுகளும் நஷ்டங்களும் குறையும். அதே நேரம் வரும்படியும் லாபங்களும் அதிகரிக்கும். சுருங்கச் சொன்னால் அதிருஷ்டமான வாரம். எனினும் அந்த லாபங்களும் வருமானமும் நேர்வழியில் வருமாறு பார்த்துக்கொள்ள வேண்டியது உங்க பொறுப்பு.

சந்திராஷ்டமம்: 28.02.2018 முதல் 03.03.2018

கும்பம்

பேச்சில் கண்ணியமும் உண்மைத் தன்மையும் அதிகரிப்பதால், உங்க மேல மத்தவங்க வெச்சிருந்த மதிப்புக் கூடும். மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் கூடுவதால் ஆசிரியரின் ஆசி அதிகரிக்கும். நண்பர்கள் நன்மை செய்து ‘நண்பேண்டா..” என்று சொல்ல வைப்பாங்க. அதே சமயத்தில் பகைவர்களிடம் மிகவும் கவனமாய் இருந்தாக வேண்டிய காலம் இது. எங்கும் எதிலும் தாமதம் என்று ஒரு புறம் மனதில் சலிப்பு இருந்தாலும், கணவன் மனைவி இடையே மிக  நல்ல புரிதல் இருக்கும். கடன் பாக்கிகள் வசூலாவதில் சிறு இழுபறிகள் இருந்தாலும் நல்லபடியாக முடியும்.

மீனம்

உடல் நிலை பற்றி இருந்து வந்த கவலைகள் தீரும். மனதைத் தயார் நிலையில் வைத்திருப்பதாலும், மன வலிமை அதிகமாய்க் கொண்டிருப்பதாலும் எந்தத் துன்பமும் உங்களை அண்டாது… அணுகாது. பல காலம் காத்திருந்த அதிருஷ்ட வாய்ப்புகள் வரும். குழந்தைகள் விஷயத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும். குடும்பம் பெரிதாக சான்ஸ் இருக்குங்க. அதாவது திருமணம் குழந்தைப்பேறு போன்றவை குடும்பத்தில் நிகழும்னு சொல்ல வந்தேன். புகழும் பெருமையும் அதிகரிக்கும். பாராட்டுகள் உங்க தலையைக் கிறுகிறுக்கச்செய்யாம பார்த்துக்குங்க.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: weekly_Rasi palan   23.02.2018 to 01.03.2018 - Vedha Gopalan, வார ராசிபலன் 23-02-18 முதல் 01-03-18 வரை : வேதா கோபாலன்
-=-