வார ராசிபலன் 16-2-18 முதல் 22-02-18 வரை – வேதா கோபாலன்

Must read

மேஷம்

பல பழைய பாக்கிகள் வசூலாகும். எதிரே பார்க்காத திசைகளிலிருந்தெல்லாம் காசு.. பணம்.. துட்டு.. மனி.. எல்லாம் வரும். கலைதுறைல உள்ளவங்க ஜொலிப்பீங்க.. நல்ல வருமானமும் பார்ப்பீங்க.. கொஞ்சம் முன்ன பின்னயா இருந்து வந்த ஆரோக்யம் ஒரு வழியா நல்லபடியா ஆகும். கல்வித்துற்றையில் உள்ளவங்களுக்கும் புத்தகம் போடுபவர்களுக்கும் நல்ல காலம் ராக்கெட் வேகத்தில் நெருங்குது.  வேலை பார்க்குமிடத்தில் கொஞ்சம் அனுசரிச்சுப்போக வேண்டியிருக்கலாம்.  ஸோ வாட். அனுசரிங்களேன்.. அதனால என்ன இப்ப?

ரிஷபம்

கடந்த ஓரிரண்டு வாரங்களாய் மனசை அரிச்சுக்கிட்டிருந்த விஷயங்களெல்லாம் பனி விலகுவது போல் விலகி மனசில் அப்பாடா என்ற நிம்மதியும் சந்தோஷமும் நிறையும். புருஷன் பெண்டாட்டிக்கிடையே இருந்து வந்த பிரச்சனைகளுக்கு ஒருவழியா  ஃபுல்ஸ்டாப் வெச்சாச்சு. கணவருக்கு/ மனைவிக்கு லாபமும், வருமானமும், நன்மையும் உண்டாகும். இதனால் வீட்டில் இனிமையான சூழல் நிலவும். ஆரோக்யத்தை நீங்க கவனமாய்ப் பார்த்துக்கறவர். இருந்தாலும் இப்ப் சற்றுக் கூடுதல் கவனம் கட்டாயம் தேவை.

மிதுனம்

அலுவலகத்தில் தேக்க நிலை இருக்கும். கண்டுக்காம உங்க கடமையைச் செய்ங்க.. அது பாட்டுக்கு நல்லது நடக்கும். சோம்பலுக்கு உங்க அட்ரெஸ் தெரியாம பார்த்துக்குங்க. விருந்தாளி மாதிரி வரும். பிறகு பர்மெனெண்ட்டா தங்கிடும். கேர்ஃபுல்லா இருங்க. கோயில்களுக்குப் போவது பற்றி நீங்க போட்டிருந்த திட்டமெல்லாம் தள்ளிப்போயிக்கிட்டே இருந்த்தல்லவா? இனி மெல்ல மெல்ல நிறைவேறும். அதிருஷ்டம் மெல்ல மெல்ல உங்க முகவரியைத் தேடிக் கண்டுபிடிச்சு உங்களை வந்தடையும். புத்திசாலித்தனம் காரணமாப் பாராட்டுக்கிடைக்கும்.

கடகம்

ஆரோக்யப் பிரச்சினை வந்தால் உடனே டென்ஷனாகித் தலையில் கை வெச்சுக்கிட்டு உட்கார்ந்துடாதீங்க. எல்லாம் சரியாகும். தலைமைப் பொறுப்பில் இருக்கும் நீங்க சற்றுக்கடுமையாப்பேச வேண்டி வரும். எனினும் மனசு நோகும்படி பேசக்கூடாது என்பதில் உறுதியா இருங்க. ப்ளீஸ். அப்புறம் இன்னொரு விஷயம்.. கணவருக்கும் ஒய்ஃபுக்கும் நடுவில் சண்டையும் இருக்கும் சச்சரவும் இருக்கும். எதையுமே சீரியஸ் விஷயமா நினைக்காதீங்க. ஏன்னா, நாளைக்கே வெள்ளைக்கொடி பறக்கும். சிரிப்பும் சந்தோஷமும் வீட்டையே நிறைக்கும். அப்போ மனசு உறுத்தக் கூடாதில்லையா?    

சந்திராஷ்டமம் : 15.02.2018 முதல் 18.02.2018 வரை

சிம்மம்

கணவன் மனைவிக்குள் சண்டையே ஏற்படாமல் பார்த்துக்குங்க… அப்படி ஒரு வேளை வாக்குவாதம் ஏற்பட நேர்ந்தால்..  அது பெரிதாகாமல் அப்படியே விடுவது உங்கள் கையில்தான் இருக்கிறது. இல்லாவிட்டால் பின்விளைவு சங்கடப்படுத்தும். கவனமாக இருங்க. மாணவர்களுக்கு நல்லகாலம் திடீர்னு வரும். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகளும் வம்புகளும் முழுசாஇக் காணாமல் போகும். குடும்பத்தில் யாருக்காவது குழந்தையின்மை இருந்தால் அந்த தோஷம் துடைக்கப்படும். திருமண யோகம் வரும்.

சந்திராஷ்டமம் : 18.02.2018 முதல் 20.02.2018 வரை

கன்னி

சண்டை சச்சரவால் பிரிஞ்சிருந்த சகோதர சகோதரிகள் இணைவீங்க. வெளி நாட்டில் சம்பாதிக்கறவங்களுக்கு வருமானம் அதிகமாகும். வாகனம் வாங்க முயன்றால் அது சற்று தள்ளிப்போகும் (வாகனமல்ல.. திட்டம்) பொறுமையாய் முயற்சி செய்ங்க… கைகூடும். லோன் போட்டிருந்தால் அது விரைவாய்க் கிடைக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். அனைத்து நண்பர்களாலும் நன்மை உண்டு. மற்றவர்களை அலட்சியமாய்ப்பார்க்கும் உங்கள் பகைவர்களும் நண்பர்களும் உங்களை மதித்து நடந்துகொள்வார்கள்.

சந்திராஷ்டமம் : 20.02.2018 முதல் 22.02.2018 வரை

துலாம்

உடல் நிலை சரியில்லைன்னு டென்ஷன் கின்ஷன் ஆகாதீங்க. இமயமலைன்னு நீங்க பயந்தது கூழாங்கல் சைஸ் பிரச்சினை. உங்களுக்கு மட்டுமில்லாம உங்க மம்மிக்கும் பெரிய பிரச்சினை வந்துவிடவில்லை. முன்பு பேச்சினால் ஏற்பட்ட பிரச்சினைகளையெல்லாம் அதே பேச்சினால் இப்ப நீங்களே சரி செய்து நேராக்குவீங்க. டோண்ட் வொர்ரி. குழந்தைங்க உங்களை உச்சாணியில் தூக்கி வெச்சுக்கொண்டாடுவாங்க.. அவங்களோட வெற்றியும் உங்களை மனம் மகிழச்செய்யும். சுருங்கச்சொன்னால், போன வருஷம் அவங்க எவ்ளோக்கெவ்ளோ டென்ஷன்ஸ் குடுத்தாங்களோ, இந்த வருஷம் அத்தனைக்கத்தனை மகிழ்ச்சியும் பெருமிதமும் குடுப்பாங்க.

விருச்சிகம்

திடீர்னு வாழ்க்கையில் வசந்தம் வீசும். வார்த்தைகளை மட்டும் விடாம இருந்தீங்கன்னா டோட்டலா பிழைச்சீங்க. குழந்தைங்க வாழ்க்கை மேம்படும். கணவன் மனைவி சண்டை திடீர்னு ராசியாயிடும். அப்பா உங்க மேல பாச மழை பொழிவார். திடீர் அதிருஷ்டம் ஒரு சின்ன விசிட் செய்து அவசரமாக ஓடும். கோபத்தையும் சோம்பலையும் கண்டிப்பாக நீங்க கட்டுப்படுத்திக்கொண்டாக வேண்டும். தயவு செய்து இந்த ஒரு விஷயத்தை மட்டும் மறக்கவே மறக்காதீங்க. சவால்களை சந்திக்கிறேன் பேர்வழி என்று எந்த ரிஸ்க்கிலும் குதிக்க வேண்டாம்.

தனுசு

புதிய செலவுகள் வந்து உங்க வீட்டு வாசல் கதவைத் தட்டும். அவை திடீர் செலவுகளாகவும் நல்ல் சுபமான செலவுகளாகவும் இருந்து உங்களுக்கு மகிழ்ச்சியை அள்ளித் தெளிக்கும். நீங்கள் கற்பிக்கும் தொழிலில் இருந்தாலோ டீம் லீடர் போன்ற வழிநடத்தும் வேலை பார்த்தாலோ பாராட்டும் கை தட்டலும் கிடைக்கும். எது பேசினாலும் கட்டாயமாய் நல்லதாகவே பேசுங்கள். ஏனெனில் நீங்க பேசுவது வார்த்தைக்கு வார்த்தை பலிக்கும். யாருக்கு என்ன ஆனால் எனக்கென்ன என்று சாபம் விடாதீங்க. ஏனெனில் நீங்க சொல்வது உங்களுக்கும் நடக்கும்.

மகரம்

புதுப்புது சாதனைங்க செய்து வெற்றியும் பாராட்டும் பெறூவீங்க. இத்தனை நாளாய்க் காத்துக்கிட்டிருந்த வருமானங்களும் வாராக்கடன்களும் உங்களைத் தேடி வரும். நிறைய மேடைகளில் பேசுவீங்க. கை தட்டல் வாங்குவீங்க. புகழ் அதிகரிக்கும். திரைத்துரைல உள்ளவங்களுக்குத் திருப்புமுனைகள் வரும். புதிய ஒப்பந்தங்களில் சைன் பண்ணுவீங்க. ரயில்.. பஸ்.. கார்.. பிளேன்.. பைக் என்று ஒரு வாகனம் விடாமல் பயணம் செய்வீங்க. அப்பவும் களைப்புக்கு பதில் உற்சாகம்தான் வரும். ஏன் தெரியுமா? பயணமெல்லாம் வெற்றி தரும்.

கும்பம்

அப்பாவாலோ, அப்பாவுக்கோ பிரச்சினை ஏற்பட்டால் டென்ஷனே வேண்டாம். அது நிச்சயமாக மிகவும் தாற்காலிகம். திடீர்னு அதிருஷ்டம் அடிச்சுப் பணம் வரும். சம்பளம் அதிகரிக்கும். ஆனால் மிகவும் எதிர்பார்த்த வருமானங்களில் சற்றுத் தடைகளும் தாமதங்களும் ஏற்பட்டால் பயப்படாதீங்க. தானே வரும். அலுவலகம் மாறுவது பற்றி அவசரம் வேண்டாம். கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும். வரவும் செலவும் சமமா இருந்தாலும் மனசில் நிம்மதி நிறையும். புத்திசாலித்தனமான காரியங்கள் செய்து நல்ல பெயர் எடுப்பீங்க.

மீனம்

மலை போலே வரும் சோதனை யாவும் பனி போல் நீங்கும். எதையும் நினைச்சு பயமே வேண்டாம். குடும்ப டென்ஷன்கள் எல்லாமே சரியாகிவிடும். குழந்தைகள் உங்களுக்கு சின்ன டென்ஷன் குடுத்தாலும் அது கடுகு சைசுக்குதான் இருக்கும். ஆனா நீங்க அவங்களுக்கு பெரிய டென்ஷன் குடுக்காதீங்க. அப்பாவுக்கு அவசர லக் அடிக்கும். பிரபலமாவீங்க. பாராட்டுகள் கிடைக்கும். சகோதர சகோதரிகளுடனான நல்லுரவு சீரடையும். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்ஸ் வரும். வேலை பார்க்குமிடத்தில் சின்ன சலசலப்பு ஏற்படலாம். பெரிதுபடுத்த வே/ண்டாம். வீட்டிலும் வெளியிலும் உறவினர் மத்தியிலும் பெருந்தன்மையாப்போயிடுங்க.

More articles

Latest article