வார ராசிபலன்: 22.7.2022 முதல் 28.7.2022 வரை!   வேதா கோபாலன்

Must read

மேஷம்

நெறைய செலவு வந்தால் தான் என்ன! அதை மிஞ்சும்படியாக வருமானமும் உண்டுங்க. மூக்கு மேல  ரெடியா உட்கார்ந்துகிட்டு இருக்கிற அந்தப் பொல்லாத கோபத்தை விரட்டி அடிக்கப் பாருங்களேன். அவசரப்பட்டு பேசிட்டு அப்புறம் ஆற அமர வருத்தப்படுவதில அர்த்தமே இல்லை. வெளிநாடு வெளியூர் வெளி மாநிலம்னு விதம் விதமாய் பயணம் போவீங்க. குடும்பத்துல யாருக்கோ பெரிய நன்மை வார ஆரம்பத்தில் நடக்கும். நீங்கள் ஆணா இருந்தால் சகோதரிக்கும் பெண்ணாக இருந்தால் சகோதரருக்கும் நல்ல விஷயம் நடக்கப் போகுது. மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் கிடைக்க வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவிக்குள்ள வாக்குவாதம் செய்யவே கூடாதுன்னு அக்ரீமெண்ட் போட்டுக்குங்க. உத்தியோகம் பார்க்கும் இடத்தில நிறைய உழைக்க வேண்டி இருந்தாலும் உழைப்புக்கேற்ற ஊதியம் கட்டாயமா உண்டு.

ரிஷபம்

படிப்பு விஷயத்திலும் நண்பர்கள் விஷயத்திலும் ஆரோக்கிய விஷயத்திலும் அதிர்ஷ்டம் இருக்கு. உன்னத நிலையை அடைய நீங்க எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் வெற்றி பெறும். சம்பளம் அதிகமாகும். வாக்கினில் இனிமையும் வசீகரமும் ஏற்பட்டு எல்லாருக்கும் பிடிச்சவரா ஆவீங்க. பிரதர் சிஸ்டர் ஆகியோருக்கு அரசாங்க நன்மை உண்டு. அவங்க படிக்கிற மாணவரா/ மாணவியா இருந்தால் பிரைஸ் வாங்குவாங்க. இத்தனை காலம் எதிரின்னு நினைச்சு நீங்க பயந்துக்கிட்டு இருந்தவங்க திடீர்னு நல்லவங்களா ஆயிடுவாங்க. யார் கண்டது அவங்க வந்து ஒங்க காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டால் கூட ஆச்சரியப்படறதுக்கு இல்லை. கணவர் /மனைவி மூலமாய் செலவுங்க வந்தாலும், அது ஹாப்பியான செலவாய்த்தான் இருக்கும். குடும்பம் மொத்தமும் ஒண்ணா உட்கார்ந்து என்ஜாய் செய்வீங்க. கலகலன்னு பேசிச் சிரிப்பீங்க. ஜாலியா இருப்பீங்க.

மிதுனம்

உங்க இன்டெலிஜென்ட்டான பேச்சு மத்தவங்களை அசர வைக்கும். திடீர் லாபம் திடீர் நன்மை கட்டாயம் உண்டு. அப்பாவுக்கு நல்ல விஷயம் நடக்கப் போகுதுங்க. அவருக்கு உத்தியோகத்துல குட் நியூஸ் இருக்கும். வெளிநாட்டிலிருந்து லாபமும் நன்மையும் வரும். ஃபாரின்ல இருக்குற உங்க உறவுக்காரங்க கிட்ட இருந்து குட் நியூஸ் வரும். அம்மாவுக்கு சந்தோஷம் தரும் செயல் ஒண்ணு நடக்க போகுது. இத்தனை காலம் வாகனத்தினால செலவுங்க வந்துகிட்டு இருந்துச்சு இல்லையா? அதெல்லாம் முடிவுக்கு வரும். மாணவர்களுக்கு ஜாக்பாட் அடிச்ச மாதிரி மார்க் வந்து அள்ளிக் கொட்டும். மகள் அல்லது மகன் கொஞ்சம் டென்ஷன் குடுத்தா விட்டுப் பிடிங்க. அதை விட்டுட்டு அவங்க கூட மல்லுக்கு நின்னுகிட்டு இருக்காதீங்க. ஒங்களோட கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும். உங்க பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

கடகம்

முன்பை விட மனசுல கருணையும் இரக்கமும் அதிகமா இருக்கும். எடுத்த விஷயம் எதுவும் உடனே முடியலைன்னு பதற்றப்படாதீங்க. மெல்ல மெல்ல வெற்றி உண்டுங்க. நல்ல அதிர்ஷ்டமான வாரம் இது. புது வேலை தேடிக்கிட்டு இருக்கிறவங்களுக்கு அருமையான ஜாப் கிடைக்கும். அம்மா கிட்ட ஃபைட்டிங் பண்ணாதீங்க. பாவங்க அவங்க. திருமணம் கொஞ்சம் தள்ளி போய்கிட்டு இருந்தவங்களுக்கு, சீக்கிரத்தில் நல்ல நியூஸ் வர்றதுக்கான அறிகுறிகள் தென்படும். அம்மா மூலம் பெரிய நல்ல விஷயம் ஒண்ணு நடக்கப்போகுது. வெளிநாட்டு வேலை தேடிக்கிட்டு இருந்தவங்களுக்கு இதோ வந்தாச்சு குட் நியூஸ். கணவன் அல்லது மனைவி செய்து கிட்டிருந்த உத்யோகம் சம்பந்தமான முயற்சிகளில் சின்ன சின்ன தடைகள் தாமதங்கள் வந்தாலும் வெற்றிகரமாய் முடியும். பொறுமை மட்டும் கட்டாயம் வேணுங்க.  வாரக் கடைசில நல்ல தகவல் வரும்.

சிம்மம்

இத்தனை காலம் எல்லா விஷயத்துலயும் தடையும் தாமதம் இருந்த நிலைமை மாறி நீங்க முயற்சி செய்த விஷயங்கள் டக் டக்குனு நடக்கும். சகோதர சகோதரிங்க கூட இருந்துகிட்டிருந்த சின்ன சின்ன பைட் எல்லாம் சரியா போயிடும். பிகாஸ் அவங்க வெளிநாடு போவாங்க. வெளிநாட்டில் உள்ள நெருங்கின உறவுக்காரங்களுக்கு உங்க மூலம் நல்ல விஷயம் நடக்கும். பல காலம் குழந்தை இல்லாமல் ஏங்கிக்கிட்டு இருந்தவங்களுக்கு குவா குவா மியூஸிக் விரைவில் கேட்கப் போகுதுன்னு கன்ஃபர்மேஷன் கிடைக்கும்.  வயிறு சம்பந்தமான சின்ன சின்ன உபாதைகள் ஏற்பட்டாலும் உடனடியா சரியாகும் டென்ஷன் வேண்டாம். நல்ல நல்ல காரணங்களுக்காக நிறைய காசு அள்ளி விடுவீங்க. அது உங்களுக்கு மட்டுமில்லாமல் உங்களைச் சேர்ந்தவர்களுக்கும் சந்தோஷம் தரப் போகுது. வீட்டுல சுப நிகழ்ச்சி வரப்போகுதுங்க. வார ஆரம்பமே ஹாப்பியா இருக்கும்.

கன்னி

ஒண்ணு ரெண்டு சந்தர்ப்பங்கள்ல நீங்க கொஞ்சம் அடங்கிப் போக முயற்சி செய்ங்க தப்பில்லை. எத்தனையோ காலமா உங்களைச் சுற்றிச்சுற்றி டென்ஷன் கொடுத்துகிட்டு இருந்த பல பிராப்ளம்ஸ் அடுத்தடுத்து சரியாவதைப் பார்க்கப் போகிறீர்கள். எதிர்பார்க்காம நிதிநிலைமை டக் என்று உயரும். கணவர் அல்லது மனைவிக்கு இத்தனை காலமா தொடர்ந்து இருந்துகிட்டு இருந்த பிரச்சனைங்க சால்வ் ஆயிடும். டாடிக்கு பாராட்டும் புகழும் கிடைக்கும். அம்மாவுக்கு பிறந்த வீட்டிலிருந்து சந்தோஷமான தகவல்ஸ் வரும்.  ஆரோக்கியத்தை மட்டும் கட்டாயம் கவனமாப் பார்த்துக்கணுங்க.  குழந்தைங்க எடுக்கற முயற்சிகள் கொஞ்சம் தடை தாமதத்தை சந்திச்சாலும் முடிவு சுபமே. திடீர்னு நிறைய வாய்ப்புகளும் லாபங்களும் மடமடன்னு வரும். நீங்க கத்துக்கிட்ட கலைகளும் படிச்ச படிப்பும் வருமானம் குடுக்கும்.  அம்மா அல்லது அம்மா வழி சொந்தங்கள் மூலமாக நன்மைகள் நடக்கும்.

சந்திராஷ்டமம்: ஜூலை 20 முதல் ஜூலை 23 வரை /சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்கவும்

துலாம்

ஸ்டூடன்ட்ஸைப் பொருத்த வரைக்கும் எதுவுமே கொஞ்சம் ஸ்லோவா தாங்க நடக்கும். அதுக்காக டென்ஷன் ஆயிடுவீங்களா என்ன? உங்களால உங்க நண்பர்களுக்கு நல்ல முன்னேற்றம் கெடைக்கப் போகுது. அதனால அவங்க உங்க கிட்ட ரொம்ப நன்றியோட இருப்பாங்க. கணவர் அல்லது மனைவியோட நீங்க சண்டை போட்டாலும் உடனே சமாதானமாயிடுவீங்க. அவங்களுமே உடனே கோபத்தை மறந்துடுவாங்க. அவங்களுக்கு அலுவலகத்தில் நிறைய நன்மை ஏற்படும். வெளிநாட்டு வாய்ப்பு அவங்களுக்கோ அல்லது உங்க ரெண்டு பேருக்குமோ கெடைக்க வாய்ப்பு இருக்கு. குடும்பத்தோட வெளியூர் அல்லது வெளிநாடு போவீங்க. இத்தனை காலமா நீங்க பயந்துகிட்டு இருந்த ஒரு விஷயம் நல்லபடியா முடிவுக்கு வரும். அதனால மனசு முழுக்க நிம்மதி பரவும்.  சின்னச் சின்ன உடல் உபாதைங்க வந்தாலும் அது சிறு மருத்துவத்துலயே சரியாயிடும்.

சந்திராஷ்டமம்: ஜூலை 23 முதல் ஜூலை 25 வரை / சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்கவும்

விருச்சிகம்

மனசுல நல்ல நல்ல எண்ணங்கள்லாம் உருவாகும்.  சகோதர சகோதரிங்களுக்கு சின்னச்சின்ன தடை தாமதங்கள் ஏற்பட்டாலும் எதுவும் நல்லபடியா முடிஞ்சுடுங்க. குழந்தைங்க பத்தி ஒங்க மனசுல இருந்துகிட்டிருந்த பயங்கள் அத்தனையும் தீர்ந்துடும். திடீர் திடீர்னு கோவில் குளம் விசிட் அடிப்பீங்க. நல்ல நல்ல நண்பர்களை ரொம்ப நாள் கழிச்சு சந்திப்பீங்க. ஃபாரின்ல இருக்கும் உங்க நண்பர்கள் உங்க வீட்டுக்கு வருவாங்க. எதிரிங்க பற்றி இருந்துக்கிட்டிருந்த பயமெல்லாம் தீரும். செலவுகள் சூப்பரா கட்டுப்படும். வார்த்தைகள் நல்லவிதமாய் வரும். உங்களுக்கு வாக்குப்பலிதம் ஏற்படும்.  தட் மீன்ஸ்… நீங்க சொன்னதெல்லாம் நடக்கும். ஒங்களோட செல்வாக்கு அதிகமாகும். நீங்க சொன்னால் அதை நிறைவேற்றக் காத்திருப்பாங்க. மனசில் அமைதியும் நிம்மதியும் அதிகரிக்கும். பழைய டென்ஷன்ஸ் அவ்வளவும் தீரும்.

சந்திராஷ்டமம்: ஜூலை 25 முதல் ஜூலை 27 வரை / சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்கவும்

தனுசு

கல்யாணம் போன்ற சுப விஷயங்கள் சின்னச்சின்ன தடை தாமதத்துக்கு பிறகு நல்லபடியாய் முடியும். பேசும் வார்த்தைகளில் ரொம்ப கவனமா இருங்க. ஆரோக்கியம் பற்றி கேர்ஃபுல்லா இருங்க. உஷ்ணாதிக்கம் சம்பந்தமான சின்ன பிரச்சனைகள் ஏற்படக்கூடும். இட்ஸ் ஓகே. சரியாயிடும். பயப்படாதீங்க. காதல் நிறைவேறும். கணவன் மனைவிக்குள்ள நல்ல ரிலேஷன்ஷிப் நிலவும். குழந்தைங்களுக்கு திடீர் நன்மை உண்டு. உங்க மகனோ அல்லது டாட்டரோ படிப்புக்காகவோ உத்தியோகம் காரணமாகவோ கல்யாணம் ஆகியோர் வெளியூர் அல்லது வெளிநாடு போவாங்க. நண்பர்களால் உங்க வாழ்க்கையில நல்ல விஷயங்கள் நடக்கும். மனசில் ஏற்பட்டிருந்த வஞ்சமும் கோபமும் தீரும். வெளிநாட்டில் முதலீடு செய்திருந்தால் அது லாபம் தரும்.  வெளிநாட்டிலிருந்து வரும் நண்பர்கள் அல்லது உறவினர்கள் உங்களுக்குப் பிடிச்ச அன்பளிப்பு தருவாங்க.

சந்திராஷ்டமம்: ஜூலை 27 முதல் ஜூலை 30 வரை / சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்கவும்

மகரம்

எல்லா விஷயத்திலும் கொஞ்சம் கவனமா அடி எடுத்து வைக்கக் கத்துக்கிட்டு இருப்பிங்க. இதனால பிரச்சினைங்க குறைஞ்சிருக்கும். கணவர் அல்லது மனைவிக்கு அரசாங்க வேலை கிடைக்கும். பேச்சினால் நன்மை விளையும். சகோதர சகோதரிங்களுக்கு ஹெல்ப்ஃபுல்லா இருப்பீங்க. அம்மாவுடன் இத்தனை காலம் இருந்துகிட்டு இருந்த ஃபைட் எல்லாம் சமாதானம் ஆகும். குழந்தைங்க வாழ்க்கையில நடக்க வேண்டிய நல்ல விஷயங்கள் சூப்பரா நிறைவேறும். உங்களோட புத்திசாலித்தனம் வெளிப்பட்டு பாராட்டையும் புகழையும் வாங்கி கொடுக்கும். ஃபாரின்ல வேலை தேடிக்கிட்டு இருந்தவங்களுக்கு அது கெடைக்கும். உத்தியோகம் சம்பந்தமா சின்னதாவோ பெரிதாகவோ டூர் போக வேண்டி இருக்கலாம். குடும்பத்தில் ஒரு நல்ல நிகழ்ச்சி நடக்க சான்ஸ் இருக்கு. கொஞ்ச நாளா காணாமல் போயிருந்த தைரியமும் தன்னம்பிக்கையும் மறுபடியும் மனசுல ஓடி வந்து ஒட்டிக்கும்.

கும்பம்

பிரிஞ்சு போயிருந்த நண்பர்களோ உறவினர்களோ சமாதானக் கொடி காட்டிக்கிட்டு உங்களை நோக்கிப் புன்னகையோட வருவாங்க தேவையில்லாத பிரச்சனைங்களை நீங்களே இன்வைட் பண்ணிக்காதீங்க. உங்கள் ஆபிசில் உள்ள மேலதிகாரிங்க உங்களோட திறமையைப் பாராட்டுவாங்க. மேலிடத்தில் உள்ளவங்களைக் கவரும் விதமா நீங்க பெர்ஃபார்ம் செய்து காட்டுவீங்க. சகோதர சகோதரிங்களுடன் டூர் போவீங்க. மருத்துவத்துறையில படிச்சுக்கிட்டு இருக்கிறவங்களுக்கு நன்மை நடக்கும்.  உங்களோட குழந்தைங்க, தங்களோட வாழ்க்கைல புகழ் பெறப் போறாங்க. அதுக்கான அறிகுறி இப்பவே தெரியும். எந்த விஷயத்தையும் அலைஞ்சு திரிஞ்சு தான் நடத்த  முடியும். அதனால என்னங்க? வெற்றிகரமா முடிச்சு உங்களுக்கு நீங்களே  ஷொட்டு குடுத்துவீங்க.

மீனம்

இத்தனை காலமா பாடாய்ப் படுத்திக்கிட்டு இருந்த உங்களோட ஹெல்த் இனி நீங்க சொன்னதைக் கேட்டு சந்தோஷமா ஒத்துழைக்கும். அப்பாவுக்கு வாழ்க்கைல ஒரு சிறப்பு ஏற்படும். தன்னம்பிக்கை காரணமா வாழ்க்கையில சாதனைகள் செய்வீங்க. உங்க குழந்தைகளுக்கு கவர்மெண்ட் மூலமா நல்ல விஷயங்கள் நடக்கும். அவங்க மாணவர்களா இருந்தா ஸ்காலர்ஷிப் கெடைக்கும். உங்க குடும்பத்துல யாரோ ஒருத்தர் வெளிநாடு போவாங்க. பயந்து காத்துகிட்டு இருந்த விஷயம் ஒன்னு சந்தோஷமா நல்லபடியா நடக்கும். ஆபீஸில் உங்களோட செல்வாக்கு இன்கிரீஸ் ஆகும். வேலை மாறும் எண்ணம் ஏற்படும். நாலு பேர் பாராட்டும்படியான பொதுக் காரியங்களைச் செய்வீங்க. விருந்து கேளிக்கை மாதிரியான விஷயங்கள்ல ஈடுபட்டு என்ஜாய் செய்வீங்க. எந்த விதமான லாபமும் வருமானமும் நிதானமாய்த் தான் வரும். புகழ் பெற்றவங்களைச் சந்திப்பீங்க.

More articles

Latest article